• முகப்பு
  • aanmegam
  • கும்பகோணம் நவகிரகங்களில் ராக ஸ்தலமாக விளங்கும் நாகநாதசாமி ஆலயத்தில் இன்று வைகாசி விசாகத் திருவிழா.

கும்பகோணம் நவகிரகங்களில் ராக ஸ்தலமாக விளங்கும் நாகநாதசாமி ஆலயத்தில் இன்று வைகாசி விசாகத் திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர் இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள், கலைமகள், வீட்டிருந்து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார் இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும் இத்தலத்தில் ராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார். இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகாசி விசாகப் பெருவிழா 12 நாட்கள் நடைபெறும் . அதுபோல இவ்வாண்டு காலை அலங்கரிக்கப் பட்டுள்ள சிறப்பு மலர் அலங்காரத்தில் நாகநாதசுவாமி பிறையணி அம்மன் கிரிகுஜாம்பிகை விநாயகர் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருள கொடிமரத்திற்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க ரிஷப லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகாதீபாராதனை செய்விக்கப்பட்ட பின்னர், சுவாமிகளுக்கும் மகா தீபாராதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏழாம் திருநாளாக திருக்கல்யாணமும் பத்தாம் திருநாளாக தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended