• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருக்குவளை ஸ்ரீ தியாகராஜஸ்வாமி ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு ஆலய திருத்தேரோட்டம்.

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜஸ்வாமி ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு ஆலய திருத்தேரோட்டம்.

செ.சீனிவாசன்

UPDATED: May 30, 2023, 11:42:47 AM

நாகை மாவட்டம் திருக்குவளையில் பழமை வாய்ந்த திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டமர்பூங்குழலாள் சமதே பிரமபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவிலான ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் உள்ளது.

இவ்வாலயத்தில் பிரம்மோற்சவ வைகாசி பெருந்திருவிழா 14ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் துவங்கியது 22 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை மாலை தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்று,

சுவாமி வீதியுலா நடைபெற்று வந்த நிலையில் இன்று வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் அதனைத் தொடர்ந்து 

தருமை ஆதீனம் கட்டளை விசாரணை மாணிக்க வாசகர் தம்பிரான் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா என பக்தி பரவசத்தில் முழக்கம் மிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது வழி நடுவிலும் உள்ள பக்தர்கள் தியாகராஜருக்கு அர்ச்சனை செய்தனர், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended