• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குத்தாலம் அருகே மேக்கரிமங்கலம் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ஆய்வு.

குத்தாலம் அருகே மேக்கரிமங்கலம் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ஆய்வு.

தாரிக்கனி

UPDATED: May 30, 2023, 2:00:37 PM

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், மேக்கரிமங்கலம் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் நேற்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குத்தாலம் ஒன்றியத்தில் மேக்கிரிமங்கலம்,ஆனாங்கூர், குச்சிபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பெரிய மதகு வாய்க்கால், சின்ன மதகு வாய்க்கால், ஓடக்கரை வாய்க்கால்கள், மணவெளி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகளின் வசதிகளுக்காக தூர்வரப்பட்டு வருகிறது.

அப்போது ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் பேசியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

அதில் ஒரு பகுதியாக நேற்று மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் தூர்வாரும் பணிகளை துவக்கி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கும், விவசாயிகளுக்கு பாசனத்திற்கும் ஏதுவான வகையில் இருக்கும் என்றார்.

அப்போது மேக்கிரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் மற்றும் ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள், விவசாயிகள் என பல உடன் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended