• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பணிகள் முடிந்து பலமாதங்கள் ஆகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ள, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை, உடனடியாக திறக்க வேண்டும்!"

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பணிகள் முடிந்து பலமாதங்கள் ஆகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ள, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை, உடனடியாக திறக்க வேண்டும்!"

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 28, 2023, 7:45:00 PM

நெல்லை மாவட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் மற்றும் மாவட்டக்குழுக் கூட்டம், இங்குள்ள சிந்துபூந்துறை "பாலன் இல்லம்" கட்டிடத்தில் இன்று (மே.28) காலையில், நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.சபியா, தலைமை வகித்தார்.

நெல்லை மாவட்ட செயலாளர் செ.லட்சுமணன், மாநில குழு முடிவுகளை, தெளிவாக விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு.

1. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை, உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு, கொண்டு வரவேண்டும். 

2. அம்பாசமுத்திரம் தாலுகா, ஊர்க்காடு கிராமத்தில், ஏற்கனவே நத்தம் புறம்போக்கு நிலமாக இருந்து, மக்கள் பயன்பாட்டில் இருந்த குடியிருப்பு மனைகள், தற்போது அரசு புறம்போக்கு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலத்தை, அனுபவத்தில் உள்ளவர்களுக்கே, பட்டா மாற்றம் செய்து, கொடுக்க வேண்டும்.

3. தர்மபுரி, திருச்சி, சென்னை மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையினை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை, இந்த கூட்டம் வன்ணையாக கண்டிக்கிறது.

4. தமிழ்நாடு முழுவதும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையினால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை, உடனடியாக பயணிகளின் நலன் கருதி இயக்க, அரசு போக்குவரத்து அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended