• முகப்பு
  • உக்ரைன் ரஷ்யா போர் எதனால் ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கும் உரை

உக்ரைன் ரஷ்யா போர் எதனால் ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கும் உரை

Kanishka

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கருங்கடல், காஸ்பியன் கடல், இரண்டுக்கும் நடுவே இருக்கிற காகசஸ் மலைப்பகுதி. இந்த மூணும்தான் உக்ரைன் போர் மூண்டதற்கான முக்கியமான மூணு காரணிகள். சோவியத் ரஷியா மகோன்னதமாக வாழ்ந்த காலத்தில் சதுரங்கப் பலகையிலே ராஜா, ராணி, பிஷப், நைட், ரூக் பின்வரிசை மாதிரி சோவியத் ரஷியா இருந்தது. அதுக்கு பாதுகாப்பா இருக்கிற 8 முன்வரிசை பான் காய்கள் மாதிரி கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ் லோவேகியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, யூகோஸ்லாவியா, அல்பேனியா மாதிரியான 8 பொதுவுடைமை நாடுகள் இருந்தன. (இதில், யூகோஸ்லாவியாவும், அல்பேனியாவும் சோவியத் ரஷியா கூட கொஞ்சம் முரண்டு பிடிச்சுக்கிட்டே இருந்தது தனிக்கதை) சோவியத் ரஷியா 15 நாடுகளாக சிதறினபோது, இந்த முன்வரிசை களப்பணியாளர்களை எல்லாம் அமெரிக்கா தன் செல்வாக்கால் கைக்கொண்டது. கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியோட இணைந்து அமெரிக்க ஆதரவு ஒரே ஜெர்மனியாக மாறியது. செக்கோஸ்லோவேகியா செக் குடியரசு, ஸ்லோவேகியான்னு இரண்டாக உடைந்தது. யூகோஸ்லாவியா உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாகி பல நாடுகளாக சிதறியது. போலந்து, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா எல்லாம் அமெரிக்காவால் நேட்டோ என்கிற ’வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்’ ராணுவக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டன. (அட்லாண்டிக் கடலுக்கும் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா மாதிரியான நாடுகளுக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேட்கக்கூடாது) இப்படி ரஷியாவோட முன்வரிசை பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து தன் வசமாக்கிக் கொண்டது அமெரிக்கா. அடுத்ததா சோவியத் ரஷியாவோட ஒருகாலத்தில் இணைஞ்சிருந்த பால்டிக் நாடுகள்னு சொல்லப்படுற எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா நாடுகளை அமெரிக்கா அள்ளி அரவணைச்சிக்கிச்சு. இந்த நாடுகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நேட்டோ கூட்டணியில் இப்போது அங்கம் வகிக்கின்றன. அதேப்போல அடுத்தகட்டமா சோவியத் ஒன்றியத்திலே ஒருகாலத்திலே அங்கமா இருந்த ஜார்ஜியா, உக்ரைன் மாதிரியான நாடுகளை நேட்டோ கூட்டணியில் சேர்க்கிற வேலையிலே அமெரிக்கா இறங்கிச்சு. அதுக்குக் காரணம் முதல்ல சொன்ன க.கா.கா. அதாவது கருங்கடல், காஸ்பியன் கடல், காகசஸ் மலைப்பகுதிதான். காசகஸ் பகுதி இருப்பிட முதன்மைத்தன்மை வாய்ந்த இடம். நாளைக்கு ஈரான் கூடவோ, ரஷியா கூடவோ அமெரிக்காவுக்கு போர் நடந்தால், காகசஸ் பகுதியிலே இருக்கிற ஜார்ஜியா அமெரிக்காவுக்கு சிறந்த தளமா இருக்கும். அதனால ஜார்ஜியாவை எப்படியாவது நேட்டோ கூட்டணியில் சேர்க்கணும்ங்கிறது அமெரிக்காவோட எண்ணம். அடுத்ததா கருங்கடல், காஸ்பியன் கடல் இரண்டுமே எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு வளம் நிறைந்த பகுதிகள். ‘இந்த இடத்தில் ரஷியாவோட செல்வாக்கை எப்படியாவது இல்லாம ஆக்கணும். ரஷியாவை இந்த ஏரியாவை விட்டே காலி பண்ணனும்’ என்கிறது அமெரிக்காவோட நீண்டகால திட்டம். அதுக்கு ஒரே வழி, ரஷியாவுக்கும் இந்தப் பகுதியில் இருக்கிற முன்னாள் சோவியத் குடியரசு களுக்கும் இடையே சண்டையை மூட்டி விடுறதுதான். இதைத்தான் அமெரிக்கா டைம்டேபிள் போட்டு ரொம்ப கவனமாச் செய்து வருது. ரஷியாவின் காகசஸ் பகுதியிலே இருக்கிற செசன்யா பகுதி ஏன் திடீர்னு தனிநாடு கேட்டுப் போராடிச்சு? செசன்யா போர் ஏன் நடந்துச்சுன்னு உங்களுக்கு இப்ப புரிஞ்சிருக்கும். சோவியத் ரஷியாவிலே இருந்து பிரிஞ்சுபோன பல நாடுகள்ல எத்தனையோ நாடுகள் ரஷியாவுக்கு எதிரான போனாலும் அதைப்பத்தி ரஷியா கவலைப்படல்லே. ஆனா சோவியத்தில் இருந்து பிரிஞ்ச பெலாரூஸ், உக்ரைன் இந்த இரண்டு நாடுகளும் ரஷியாவுக்கு ரொம்ப வேண்டப்பட்ட பங்காளி நாடுகள். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மொழி பேசுற நாடுகள் இவை. இந்த உக்ரனை, ரஷியாவுக்கு எதிரா திருப்பிவிட அமெரிக்கா எடுத்த முயற்சிதான் உச்சகட்ட எரிச்சலை ரஷியாவுக்கு ஏற்படுத்திருச்சு. உக்ரைன் நாட்டை உசுப்பிவிட்டு நேட்டோ கூட்டணியில் இணைத்துக் கொண்டால், கருங் கடலுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான தொடர்பு கட்டாகிவிடும். இதனாலும்கூட உக்ரைனை தன்பக்கம் இழுப்பதில் அமெரிக்கா ரொம்ப ஆர்வமாக இருக்குது. இது தெரிந்துதான் கருங்கடலில் உள்ள உக்ரைனுக்குச் சொந்தமான கிரிமியா பகுதியை ரஷியா அவசர அவசரமாக்க் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டது. (கிரிமியா தீபகற்பத்தில் செவஸ்டபோல் கடற்படைத்தளத்துக்குப் போட்டியாக ருமேனியாவின் மேற்கே கருங்கடல் கரையில் அமெரிக்கா ஒரு கடற்படைத்தளம் வைத்திருப்பது இன்னொரு தனிக்கதை) இப்படி, ரஷியாவை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமெரிக

VIDEOS

RELATED NEWS

Recommended