உதயநிதி ஸ்டாலினுக்கு தாராசுரம் மார்க்கெட் அருகே பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணத்தில் நாளை காலை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி இன்று கும்பகோணம் வருகை தந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராசுரம் வருகை தந்த போது இளைஞர் அணி உதயநிதி ரசிகர் மன்றம் மற்றும் திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிறிது நேரம் உரையாற்றி சென்றார்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.