Author: சுரேஷ் பாபு

Category: மாவட்டச் செய்தி

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் நேற்றைய தினம் சுங்குவார்சத்திரம் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையில் பொருட்களை விற்றுவிட்டு இரவு சுங்குவார்சத்திரத்தில் இருந்து தக்கோலம் நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது,

மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் வந்தபோது நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் ஒரு வழிச் சாலையாக மாற்றி 

தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருப்பதை அறியாமல் ஆட்டோ ஓட்டுனர் தடுப்பு வேலி இருப்பது தெரியாமல் வேகத்தில் ஆட்டோவை செலுத்திய போது  சாலையின் தடுப்பு மீது சக்கரம் ஏறி இறங்கி பின்னர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மறு திசையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி ஆட்டோ தலைக்குப்புறாக கவிழ்ந்துள்ளது.

அதில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பெண்களில் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி 45 தேவி 38 மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் கஜலட்சுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கலைவாணி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் பூங்கொடி ஆட்டோ ஒட்டுனர் 

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும்  மனோகரன் ,திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் இருசக்கர வாகன இயக்கி வந்த நபர் உட்பட பல்வேறு அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாலை விபத்திற்கு நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே காரணம் என தெரிய வருகிறது.

சாலையின் நடுவே தடுப்புகளில் அமைக்கப்பட்ட இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் மற்றும் தடுப்பு வழி அமைக்கப்பட்ட இடத்தில் ரிப்ளேட்டர் வைக்காதது இந்த விபத்திற்கு காரணம் என தெரிய வருகிறது.

இதுபோல் சிறு சிறு அலட்சியங்களால் தான் பல உயிர்கள் பறித்து கொண்டிருக்கின்றது

Tags:

#thiruvallurnews , #thiruvallurnewsintamil , #thiruvallurnewslive , #thiruvallurnewstoday , #thiruvallurnewstodaytamil , #thiruvallurnewspapertoday , #இன்றையசெய்திகள்திருவள்ளூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalthiruvallurtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news , Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv ,#thiruvallurtodaynews , #thiruvallurlatestnews , #thiruvallurnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0