• முகப்பு
  • குற்றம்
  • திருத்தணியில் இருசக்கர வாகனம் திருட முயன்று மாட்டிக் கொண்ட இரண்டு திருடர்கள் பொதுமக்கள் தருமாடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

திருத்தணியில் இருசக்கர வாகனம் திருட முயன்று மாட்டிக் கொண்ட இரண்டு திருடர்கள் பொதுமக்கள் தருமாடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

சுரேஷ் பாபு

UPDATED: May 17, 2023, 8:53:39 AM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பழைய கமலா தியேட்டர் பகுதியில் மாட்டுக்கறி பக்கோடா நடத்தி வருபவர் குமரகுரு இவர் காசிநாதபுரம் பகுதியை சார்ந்தவர் ஆவர்,

இவரது கடையில் பக்கோடா வாங்கி சாப்பிட்டு விட்டு மூன்று பேர் இவரது இருசக்கர வாகனத்தை திருடி செல்ல முயற்சி செய்துள்ளனர்,

அப்போது பொதுமக்கள் திருடர்கள் வாகனத்தை திருடி செல்கிறார்கள் என்று குரல் கொடுத்து அந்த மூன்று பேரில் இரண்டு நபரை பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,

இவர்களிடமிருந்து ஒரு திருடன் தப்பி ஓடி விட்டான் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில்,

பிடிபட்ட நபர் ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பால சாரதி வயது 22 மற்றொரு நபர் கௌதம் வயது 19 அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் இவர்கள் மீது பதினாறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் சார்பில் தெரிவித்துள்ளனர்,

மேலும் இவர்களிடமிருந்து தப்பிச்சென்ற மற்றொரு திருடன் பெயர் சங்கர் இவன் சென்னை புளியந்தோப்பு பகுதியை சார்ந்தவர் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருத்தணியில் எந்தெந்த இடங்களில் இரு சக்கர வாகனங்களில் இவர்கள் திருடன் முயன்றார்கள் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

திருத்தணியில் இன்று கூட பைபாஸ் பகுதியில் ஒரு வாலிபர் இரு சக்கர வாகனம் திருடப்பட்டு உள்ளது.

மேலும் திருத்தணியில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருத்தணியில் தினந்தோறும் திருடப்பட்டாலும் அந்த வழக்குகள் திருத்தணி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எடுப்பதே இல்லை என்று திருத்தணி பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

ஒரு மாதத்தில் சராசரியாக 20 வண்டி திருத்தணியில் காணாமல் போகிறது திருடப்படுகிறது ஆனால் வழக்குகள் பதிவு செய்வதில்லை திருத்தணி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் இல்லாததால் திருத்தணியில் குற்ற வழக்குகள் வாகன திருட்டுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு உடனடியாக திருத்தணி காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு ஆய்வாளரை நியமனம் செய்து திருத்தணியில் இருசக்கர வாகனம் திருடப்படுவதை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended