• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நோயாளியின் உறவினர்கள் 2 பேர் பலத்த காயம்.

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நோயாளியின் உறவினர்கள் 2 பேர் பலத்த காயம்.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 18, 2023, 11:01:32 AM

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்ததாகும் இங்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த கட்டடம் ஆகும்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து முதற்கட்ட உள்நோயாளியாக இந்த இரண்டு வார்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள், நான்காவது வார்டு பெண் நோயாளிகளும், ஐந்தாவது வார்டு ஆண் நோயாளிகளும் அனுமதிக்கப்படுவர்.

பின்னர் நோய் தன்மைக்கு ஏற்ப பிற வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள். இந்த நிலையில் வார்டை ஒட்டியுள்ள வராண்டா பகுதியில் நோயாளின் உறவினர்கள் காத்திருப்பார்கள் அதுபோல காத்திருந்த பொழுது மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.

இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர், தஞ்சாவூர் சேர்ந்த கார்த்திக் என்பவரும் பாபநாசத்தை சேர்ந்த கார்த்தி என்பவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை தொடர்பு கொண்ட பொழுது  அவர் செல்போன் எடுக்கவில்லை.

இதனால் காயம் அடைந்தவர்களுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரியாமல் உள்ளது.

இந்த கட்டடம் மிகவும் பழமைவாய்ந்தது என்பதால் கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமுக ஆர்வலriகள் கோரிக்கை வைக்கின்றனர்.

பல்லாயிரம் கோடிகள் மருத்துவத்துறையில் செலவழித்தும் இது போன்ற அவல நிலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended