Author: மாரிமுத்து

Category: குற்றம்

தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் சபரி தென்றல் என்ற பெயரில் சீட்டு கம்பெனி செயல்பட்டு வருகிறது இந்த சீட்டு கம்பெனியில் தெற்கு காட்டன் ரோட்டை சேர்ந்த நவிதா.

இவர் இரண்டு லட்ச ரூபாய் சீட்டு சபரி தென்றல் சீட்டு கம்பெனியில் போட்டு இருந்தால் சீட்டு ஆரம்பிக்கும்போது ஆறாவது தவணையில் பணம் தருவதாக நிறுவனம் கூறியதை எடுத்து நவீதா சீட்டு பணம் கேட்டுள்ளார் நிறுவனம் கொடுக்க மறுத்துள்ளது.

இதனை அடுத்து திங்கட்கிழமை கட்டிய தொகை 60 ஆயிரம் ரூபாயை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியதை அடுத்து அவருடைய கணவர் பியோ பணம் பெற்றுக்கொள்ள சீட்டு கம்பெனிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வைத்து பியோவிற்கும் சீட்டு கம்பெனி நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதை அடுத்து சபரி தென்றல் சீட்டு கம்பெனி நிர்வாகம் பியோனவ அடித்து தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தலையில் ரத்தம் வடிந்த நிலையில் சீட்டு கம்பெனியிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார் கணவர் ரத்த காயத்துடன் வருவதை பார்த்த நவீதா உடனடியாக ரோட்டில் உட்கார்ந்து சீட்டு கம்பெனி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் சீட்டு கம்பெனியில் இருந்த சிசிடி கேமரா பதிவை கைப்பற்றி சென்றனர் அதன் அடிப்படையில் டவுன் டிஎஸ்பி சத்யராஜ் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நமீதா புகாரின் அடிப்படையில் சபரி தென்றல் சீட்டு கம்பெனி உரிமையாளர் ஜான் உள்பட 9 பேர் மீது மத்திய பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் அடிப்படையில் டி எஸ் பி சத்யராஜ் உத்தரவின் பேரில் சப்பானி முத்து தகப்பனார் பெயர் நாகராஜன் அண்ணாநகர் மூன்றாவது தெரு மில்லர்புரம் மேற்கு மேலும் இதில் தொடர்புடைய ராஜகோபால் நகர் 13வது தெருவை சேர்ந்த நல்ல கண்ணு மகன் கந்தசாமி என்ற ராஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இதில் தொடர்புடைய ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்  சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் டவுன் டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #crime #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0