Author: Kanishka

Category:

முருகனுக்குரிய விரதங்கள் மூன்று வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம் நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம் திதி விரதம் : சஷ்டி விரதம். இன்று மார்ச் 08-03-2022, பிலவ வருடம், மாசி 24, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 12.31 வரை. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். செவ்வாய்க்கிழமை, சஷ்டி - கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. இன்று செவ்வாய்கிழமை, சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் அபூர்வமாக மூன்றும் சேர்ந்து வரும் நாள். இன்று மாசிமாதம் செவ்வாய்கிழமை, சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் கந்தக் கடவுளை வணங்குங்கள். கார்த்திகை நட்சத்திர நாளில், கந்தபெருமானை வணங்கினால் நம் கவலையெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வார் கந்தவேலன். இன்று செவ்வாய்கிழமை, சஷ்டி திதி மற்றும் கார்த்திகை நட்சத்திரம். எனவே அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முருகக் கடவுளைத் தரிசித்து முருகன் அருளை பெறுங்கள். அற்புதமாகக் காட்சி தரும் சுப்ரமண்யருக்கு செவ்வரளி மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மனையில் உள்ள வழக்குகள் வெற்றியைத் தேடித் தரும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். கவலைகளெல்லாம் பறந்தோடச் செய்வார் கந்தவேள் ! இன்று மனதார முருகப் பெருமானை வேண்டி பூஜை செய்பவர்கள் வேண்டிய வேண்டுதல் கூடிய விரைவில் நிச்சயம் நிறைவேறும்.

Tags:

Comments & Conversations - 0