• முகப்பு
  • district
  • 2.76 கோடி மதிப்பிலான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

2.76 கோடி மதிப்பிலான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆலத்தூர்: ஜூன்-13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை, கொளக்காநத்தம், நத்தக்காடு, சீராநத்தம், அயினாபுரம், ஜமீன் ஆத்துார் மற்றும் அனைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2.76 கோடி மதிப்பிலான மதிப்பிலான பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் துவக்கி வைத்தார். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காரை முதல் மலையப்பர் சாலை வரையிலும் ரூ.80லட்சம் மதிப்பிலும், ச.குடிகாடு சாலை முதல் கொளக்காநத்தம் நத்தக்காடு சாலை வரையிலும் ரூ.46.70லட்சம் மதிப்பிலும், சீராநத்தம் முதல் கரம்பியம் சாலை வரையிலும் ரூ.30.50லட்சம் மதிப்பிலும், ஜமீன் ஆத்துார் முதல் மரவனுார் வரையிலும் ரூ.32.50லட்சம் மதிப்பிலும், என நான்கு சாலைகளை ரூ.1.90கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். கொளக்காநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலும், அயினாபுரம் ஊராட்சி அனைப்பாடி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரூ.4.33 லட்சம் மதிப்பிலும், அயினாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பிலும் என 3 அரசு பள்ளிகளுக்கும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.17.60லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலி உள்ளிட்ட தளவாட பொருட்களை கொளக்காநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அனைப்பாடி ஆதிதிராவிடர் தெருவில் ஏழை,எளிய மக்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள ஏதுவாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். கொளக்காநத்தம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திறந்துவைத்து கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் பார்வையிட்டார். ஆலத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் மாணவ-மாணவிகளும், ஏழை,எளிய அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையிலான ரூ.2.76கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், திட்டங்களை துவக்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நம் முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் பொதுமக்களின் அனைத்துக் கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் மற்றும் காரை பகுதிகளில் ரூ.2.76கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரியில் படிக்கின்றபோது மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள். அந்த சிறப்புத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்றுவர ஏதுவாக பேருந்து வசதியினை அதிகரிப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பள்ளி கல்லூரி வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப் படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா பொருத்த வேண்டும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அரசு சார்பாக அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது. அதை முன்னிட்டு அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பள்ளி பேருந்துகளில் கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டையினை ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு அதற்கான நடவடிக்கை துவங்கிருக்கிறது. எனவே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்வரை வரை ஏற்கனவே பயன்படுத்திய இலவச பேருந்து பயண அட்டைகளையே பயன்படுத்தி மாணவ, மாணவிகள் பயணிக்கலாம் என்று ஏற்கனவே தெரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆலத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார்,கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் ராகவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended