• முகப்பு
  • சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போக்குவரத்து துறையின் வசூல் விவரம்!!!

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போக்குவரத்து துறையின் வசூல் விவரம்!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை : சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி கடந்த 16-ந் தேதி அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 நிறைவடைந்தது. இதையொட்டி கடந்த 15-ந் தேதி இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று முன்தினம் காலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் திருவண்ணாமலைக்கு வருவதற்காகவும் இங்கிருந்து ஊர்களுக்கு திரும்பிச்செல்வதற்காகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி 1983 சிறப்பு பஸ்கள், 5 ஆயிரத்து 785 நடைகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமின்றி கிரிவல பாதைக்கு சென்று வரும் வகையில் நகரின் முக்கிய 9 சாலை சந்திப்பு பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டது. இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களுக்கு செல்ல சற்று அவதிப்பட்டலும் சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் பயனடைந்தனர். இந்த நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு மட்டும் டிக்கெட் கட்டணமாக ரூ.1 கோடியே 58 லட்சம் வசூல் ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,Thiruvannamalai news,Transport Department,

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended