• முகப்பு
  • chennai
  • சென்னையில் முக்கிய இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்.

சென்னையில் முக்கிய இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள் செல்லும் சாலையில் பின்னர் வெளி செல்லும் சாலையிலும் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் செல்லும் படி சோதனை அடிப்படையில் 14.06.2022 மற்றும் 15.06.2022 ஆகிய இரு நாட்களும் இரவு 23.00 மணி முதல் அதிகாலை 05.00 வரை சோதனை ஓட்டம் நடைபெறும் பின்னர் நேரடி பணி18.06.2022 மற்றும் 19.06.2022 ஆகிய இரு நாட்களும் இரவு 23.00 மணி முதல் அதிகாலை 05.00 வரை நடைபெறும்.அதற்கு கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது • ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம். எனவே சென்னை சாலை பயனாளர்கள் அனைவரும் தங்கள் பயணத்தில் மேலும் சுமார் பத்து நிமிட தாமதத்தை எதிர்பார்த்து திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended