சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பாரதப் பிரதமர் அவர்கள் பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட 26.05.2022 அன்று சென்னைக்கு வருகை தர உள்ளார். பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதனால் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை மற்றும் தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி வரை மதியம் 3 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தல். செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended