Author: கார்மேகம்

Category: மாவட்டச் செய்தி

சமிபத்தில் எனது நன்பர் ஓருவர் சுற்றுலா சென்று வந்த சுவாரசியமான அனுபவத்தைப் பேசிக் கொண்டிருந்தார் அவர் என்னிடத்தில் பகிர்ந்து கொண்ட அவரது சுற்றுலா அனுபவத்தில் இருந்து  கேரளா அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் இருந்து நன்பர்களுடன் காரில்  பொள்ளாச்சி செல்ல கேரளா வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சாலையில் சென்றோம் வழியில் வனத்துறை சோதனைச் சாவடி வந்ததும் எங்கள் காரை நிருத்தி வனத்துறையினர் சோதனை யிட்டனர்.

முதலில் காருக்குள் சோதனை யிட்டவர்கள் பிறகு பின்னால் உள்ள  டிக்கியை திறக்கச் சொன்னார்கள் காரில் மதுவோ பிரச்னைக் குறிய பொருட்கள் எதுவும் இல்லாத தைரியத்தில் நாங்கள் யாரும் கீழே இறங்காமலேயே டிக்கியை திறந்து விட்டோம் அச் சமயம் முன் பக்கம் இடது புரம் அமர்திருந்த நன்பர் மட்டும் பக்கவாட்டு கண்னாடி வழியாக பின்னால் நடப்பதை கன் கானித்த படி இருந்தார்.

சோதனை முடிந்து கார் கிளம்ப அலுவலர்கள் சிக்னல் தருவதற்கு சில நொடிகள் முன்பு சாவடி ஓரமாக அமர்திருந்த ஒரு நபர் காருக்கு அருகில் வந்து சென்றதை நன்பர் கவனித்தார் அதனால் சந்தேகப் பட்ட நன்பர்  அங்கிருந்து புறப்பட்டு ஓரு வளைவு தான்டியதும் காரை நிருத்தச் சொன்னார்.

இறங்கிச் சென்று டிக்கியை திறந்து பார்த்த போது நாங்கள் காரில் வைத்திருந்த பைகளுக்கு இடையே ஓரு சிறிய பொட்டலம் கிடந்தது அதில் இருந்தது கஞ்சா போல் தெரிந்ததால் பொட்டலத்தை காட்டுக்குள் வீசி எறிந்து  விட்டு பயணத்தை தொடர்ந்தோம் சுமார்  ஒரு மணி நேரம் பயணித்து வன எல்லையில் அடுத்த சோதனைச் சாவடியில் கார் மீண்டும் நிருத்தி  சோதனை நடந்தது.

இந்த முறை டிக்கியை திறக்கும் போது நன்பரும் இறங்கி சென்று பார்வையிட்டனர் சோதனையிட்ட வன  அலுவலர்கள் பைகளை பல வாறாக புரட்டி எதையோ தேடுவதைப் போல் தீவிரமாக இருந்தனர்.

என்ன சார் சோதனை முடிந்ததா என்று கேட்டபோது அறைகுறை மனதுடன் காரை எடுக்க அனுமதித்தனர்,

அந்த சோதனைச் சாவடியை தான்டிய பிறகுதான் எங்களுக்கு வரவிருந்த  ஆபத்து குறித்து புரிந்தது.

திட்டமிட்டு டிக்கியில் வைக்கப்பட்ட கஞ்சா பொட்ட லத்தை வழியில் தூக்கி வீசாமல் இருந்திருந்தால் 2 வது சோதனைச் சாவடியில் இதை காரணம் காட்டி மிரட்டி பணம் பறித்திருப்பார்கள்,

அல்லது வழக்கு வாய்தா என அலைக்கழித்திருப்பார்கள் பயணத்தின் போது எங்காவது கார் டிக்கியில் சோதனை நடந்தால் கண்டிப்பாக காரில் இருந்து இறங்கிச் சென்று கண்காணிக்க வேண்டும் என்பதை அன்று கற்றுக்கொண்டோம் என்றார்.

சுற்றுலா செல்வோர்கள்  காரை சோதனைச் சாவடியில் சோதனை செய்யும் போது கண்கானிக்க தவறாதீர்கள் தவறினால் சோதனை என்ற பெயரில் சோதனை நேரிடும் என்பதற்கு மேற் சொன்ன நன்பரின் அனுபவம் சான்று.

சுற்றுலா செல்வோரே கவணம்.

Tags:

#awareness #policesearch #car #ForestDepartment
Comments & Conversations - 0