• முகப்பு
  • ஆன்மீகம்
  • கோடை விடுமுறையை முன்னிட்டு வேளாங்கண்ணி குவிந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி, கடலில் குளித்து உற்சாக கொண்டாட்டம்.

கோடை விடுமுறையை முன்னிட்டு வேளாங்கண்ணி குவிந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி, கடலில் குளித்து உற்சாக கொண்டாட்டம்.

செ.சீனிவாசன்

UPDATED: May 14, 2023, 11:16:50 AM

கோடை விடுமுறையை முன்னிட்டு ஆன்மீக தலமாகவும் சுற்றுலா தளமாகவும் திகழும் உலகப் புகழ்மிக்க வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் தமிழ், குங்குனி, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது கோடை வெயிலை குளிர்ச்சியாக சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

_____________________________________________________

வேளாங்கண்ணி திருப்பலி வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்

https://youtu.be/wS5bjRYbh9M

_____________________________________________________

கோடை விடுமுறையை முன்னிட்டு ஆந்திரா கர்நாடகா கேரளா மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்ததால் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் வேளாங்கண்ணி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வருகைக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை சார்பில் கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

கோடை விடுமுறையை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended