• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் சாக்கடையால் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அவதி; துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் சாக்கடையால் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அவதி; துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

செ.சீனிவாசன்

UPDATED: May 24, 2023, 7:45:30 PM

நாகை வெளிப்பாளையத்தில் புதிய பேருந்துநிலையம் அமைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்கலான வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை, மற்றும் ஆன்மீக தளங்களுக்கு வரக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

அதே போன்று சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் இப்பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக பேருந்து நிலையம் அருகே ஓடக்கூடிய பாதள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் ஓவர் புல்லாகி பேருந்து நிலையம் முழுவதும் சாக்கடை நீர் வழிந்தோடி குளம் போல் தேங்கியுள்ளது.

இதில்தான் பேருந்துகள் மற்றும் பயனிகள் மூக்கை பிடித்துக் கொண்டு வந்து போகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறையொட்டி வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் முகம் சுழித்தாவாறு வந்து போகின்றனர்.

கடந்த 2 நாட்களாக சாக்கடை நீர் தேங்கியிருந்தும் நகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் இந்த சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

அதே போல் சாக்கடை நீரை மிதித்துக் கொண்டே பேருந்து ஏறிச் செல்வதால் காலணி, ஆடைகள் அனைத்தும் நாசமாவதும் மட்டுமின்றி தொலை தூரம் பயணம் செய்பவர்கள் பேருந்தில் துர்நாற்றத்துடனே பயணிக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

நாள் தோறும் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் சாக்கடை நீரால் தேங்கி,

துர்நாற்றம் வீசி வருவது நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு என்றும் உடனடியாக கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தால் தான் நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்றும் அடுத்த முறை சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended