இன்றைய ராசி பலன்கள் 3.6.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்றைய (03-06-2022) ராசி பலன்கள் மேஷம் ஜூன் 03, 2022 உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் சார்ந்த பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சிக்கல் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : ஒத்துழைப்பான நாள். பரணி : வாக்குவாதம் நீங்கும். கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும். ரிஷபம் ஜூன் 03, 2022 எதிர்பாராத தனவரவு கிடைக்கும். சமூக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு கிருத்திகை : வரவு மேம்படும். ரோகிணி : லாபகரமான நாள். மிருகசீரிஷம் : பாராட்டுகளை பெறுவீர்கள். மிதுனம் ஜூன் 03, 2022 வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். பணிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : முயற்சிகள் கைகூடும். புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும். கடகம் ஜூன் 03, 2022 உத்தியோக பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு புனர்பூசம் : அலைச்சல்கள் குறையும். பூசம் : அனுசரித்து செல்லவும். ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும். சிம்மம் ஜூன் 03, 2022 இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் மகம் : காலதாமதம் ஏற்படும். பூரம் : தேடல் அதிகரிக்கும். உத்திரம் : நுட்பங்களை அறிவீர்கள். கன்னி ஜூன் 03, 2022 உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். சித்திரை : முன்னேற்றமான நாள். துலாம் ஜூன் 03, 2022 அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் சித்திரை : இழுபறிகள் மறையும். சுவாதி : முன்னேற்றமான நாள். விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும். விருச்சிகம் ஜூன் 03, 2022 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கவலை குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும். அனுஷம் : புரிதல் மேம்படும். கேட்டை : நெருக்கடியான நாள். தனுசு ஜூன் 03, 2022 உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனை தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களில் பொறுமையை கையாளுவது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : விவாதங்களை தவிர்க்கவும். பூராடம் : அலைச்சல்கள் மேம்படும். உத்திராடம் : பொறுமை வேண்டும். மகரம் ஜூன் 03, 2022 பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : புரிதல் உண்டாகும். திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். கும்பம் ஜூன் 03, 2022 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள். சதயம் : மதிப்பு அதிகரிக்கும். பூரட்டாதி : சேமிப்பு மேம்படும். மீனம் ஜூன் 03, 2022 வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தைரியம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும். ரேவதி : ஈடுபாடு அதிகரிக்கும்.

VIDEOS

RELATED NEWS

Recommended