இன்றைய ராசி பலன்கள் 27.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்றைய (27-05-2022) ராசி பலன்கள் மேஷம் மே 27, 2022 மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் அஸ்வினி : தெளிவு பிறக்கும். பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும். கிருத்திகை : சாதகமான நாள். ரிஷபம் மே 27, 2022 எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் கிருத்திகை : நெருக்கடியான நாள். ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும். மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும். மிதுனம் மே 27, 2022 பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியான சூழ்நிலையும் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மிருகசீரிஷம் : முதலீடு அதிகரிக்கும். திருவாதிரை : அமைதியான நாள். புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும். கடகம் மே 27, 2022 உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும். பூசம் : வாய்ப்புகள் உண்டாகும். ஆயில்யம் : பயணங்கள் கைகூடும். சிம்மம் மே 27, 2022 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமும், அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்வாக்கு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : அங்கீகாரம் கிடைக்கும். பூரம் : கவனத்துடன் செயல்படவும். உத்திரம் : அனுசரித்து செல்லவும். கன்னி மே 27, 2022 பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு செயலாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் காலதாமதம் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பெரிய அளவிலான முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும். அஸ்தம் : காலதாமதம் ஏற்படும். சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும். துலாம் மே 27, 2022 சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும். சுவாதி : சாதகமான நாள். விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும். விருச்சிகம் மே 27, 2022 எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் விசாகம் : முயற்சிகள் கைகூடும். அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்டை : மாற்றமான நாள். தனுசு மே 27, 2022 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார துறைகளில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கலைநுட்பம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : புத்துணர்ச்சியான நாள். பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும். மகரம் மே 27, 2022 உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கைகூடும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த காரியங்களில் இழுபறிகள் குறையும். பயணங்கள் சார்ந்த தொழிலில் மேன்மை ஏற்படும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் உத்திராடம் : லாபகரமான நாள். திருவோணம் : தேவைகள் நிறைவேறும். அவிட்டம் : மேன்மை ஏற்படும். கும்பம் மே 27, 2022 மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பாராட்டும் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள். சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும். பூரட்டாதி : எதிர்ப்புகளை அறிவீர்கள். மீனம் மே 27, 2022 குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய சில பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். ரேவதி : விவாதங்களை தவிர்க்கவும்.

VIDEOS

RELATED NEWS

Recommended