இன்றைய ராசி பலன்கள் (25-05-2022)

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் மே 25, 2022 தனம் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். தனிமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும். பரணி : லாபம் கிடைக்கும். கிருத்திகை : மேன்மையான நாள். ரிஷபம் மே 25, 2022 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் கிருத்திகை : ஆதரவு உண்டாகும். ரோகிணி : உதவி கிடைக்கும். மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும். மிதுனம் மே 25, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தொழில் ரீதியான வெளியூர் நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடும், லாபமும் அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும். திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும். புனர்பூசம் : லாபகரமான நாள். கடகம் மே 25, 2022 கூட்டாளிகளின் உதவியும், ஒத்துழைப்பும் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய முயற்சிகள் கைகூடும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்வதால் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : ஒத்துழைப்பு ஏற்படும். பூசம் : முயற்சிகள் கைகூடும். ஆயில்யம் : அதிர்ஷ்டகரமான நாள். சிம்மம் மே 25, 2022 உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மகம் : மாற்றமான நாள். பூரம் : அலைச்சல்கள் உண்டாகும். உத்திரம் : விவாதங்கள் நீங்கும். கன்னி மே 25, 2022 வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார பணிகளில் வெற்றிகரமான சூழல் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : விருப்பம் நிறைவேறும். அஸ்தம் : வெற்றிகரமான நாள். சித்திரை : ஆசைகள் பிறக்கும். துலாம் மே 25, 2022 உறவினர்களின் வழியில் சுபகாரியம் கைகூடும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எந்தவொரு செயலிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சோர்வு அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் சித்திரை : சுபகாரியம் கைகூடும். சுவாதி : மகிழ்ச்சியான நாள். விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். விருச்சிகம் மே 25, 2022 புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். விவசாய பணிகளில் வரவு உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அனுஷம் : ஆதாயகரமான நாள். கேட்டை : வரவு உண்டாகும். தனுசு மே 25, 2022 எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மூலம் : அலைச்சல்கள் உண்டாகும். பூராடம் : முயற்சிகள் கைகூடும். உத்திராடம் : புரிதல் உண்டாகும். மகரம் மே 25, 2022 தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மறைமுகமான விமர்சனங்களை வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய நபர்களின் மறைமுக ஆதரவு கிடைக்கும். பயணம் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும். திருவோணம் : வெற்றிகரமான நாள். அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். கும்பம் மே 25, 2022 உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். சதயம் : நெருக்கடிகள் நீங்கும். பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். மீனம் மே 25, 2022 பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புரிதல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் பூரட்டாதி : சோர்வு ஏற்படும். உத்திரட்டாதி : ஆர்வம் மேம்படும். ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended