இன்றைய ராசி பலன்கள் (23-05-2022)

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் மே 23, 2022 குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் அஸ்வினி : மாற்றம் உண்டாகும். பரணி : மகிழ்ச்சியான நாள். கிருத்திகை : மந்தத்தன்மை நீங்கும். ரிஷபம் மே 23, 2022 இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதிகார பொறுப்பில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் உண்டாகும். தந்தை வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் கிருத்திகை : முயற்சிகள் கைகூடும். ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும். மிதுனம் மே 23, 2022 கலை சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் குறையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகான்களின் தரிசனத்தால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெற்றிகரமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மிருகசீரிஷம் : கவலைகள் குறையும். திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும். புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள். கடகம் மே 23, 2022 அரசு தொடர்பான துறைகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். அறப்பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நேர்மைக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும். பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆயில்யம் : காலதாமதம் உண்டாகும். சிம்மம் மே 23, 2022 பொருளாதார மேன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். தாமதம் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மகம் : விரயங்கள் ஏற்படும். பூரம் : தெளிவு பிறக்கும். உத்திரம் : ஈர்ப்பு அதிகரிக்கும். கன்னி மே 23, 2022 எதிர்பாராத உதவியின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் ரீதியான வெளியூர் பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திரம் : இழுபறிகள் குறையும். அஸ்தம் : மகிழ்ச்சியான நாள். சித்திரை : பொறுமையுடன் செயல்படவும். துலாம் மே 23, 2022 வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கூட்டு வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒற்றுமை அதிகரிக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் சித்திரை : மகிழ்ச்சியான நாள். சுவாதி : இழுபறிகள் மறையும். விசாகம் : விருப்பம் நிறைவேறும். விருச்சிகம் மே 23, 2022 எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பழைய முதலீடு சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். அனுஷம் : பிரச்சனைகள் நீங்கும். கேட்டை : கவனம் வேண்டும். தனுசு மே 23, 2022 வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மூலம் : பாராட்டுகள் கிடைக்கும். பூராடம் : கற்பனைத்திறன் அதிகரிக்கும். உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும். மகரம் மே 23, 2022 உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் உத்திராடம் : புரிதல் மேம்படும். திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும். கும்பம் மே 23, 2022 தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். தற்பெருமை சார்ந்த விஷயங்களை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும். சதயம் : ஒத்துழைப்பான நாள். பூரட்டாதி : குழப்பம் நீங்கும். மீனம் மே 23, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எந்தவொரு செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். உத்திரட்டாதி : நெருக்கடியான நாள். ரேவதி : ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended