இன்றைய ராசி பலன்கள் (10-06-2022)

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 10, 2022 கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும். பரணி : சிந்தித்து செயல்படவும். கிருத்திகை : அனுபவம் உண்டாகும். ரிஷபம் ஜூன் 10, 2022 சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் துரிதமாக செயல்படுவீர்கள். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : ஆதரவான நாள். ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும். மிருகசீரிஷம் : அதிர்ஷ்டகரமான நாள். மிதுனம் ஜூன் 10, 2022 மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். தானியம் மற்றும் ஆபரணம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மிருகசீரிஷம் : சிந்தனைகள் உண்டாகும். திருவாதிரை : முதலீடுகள் அதிகரிக்கும். புனர்பூசம் : சூட்சுமங்களை அறிவீர்கள். கடகம் ஜூன் 10, 2022 மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும். பூசம் : முன்னேற்றமான நாள். ஆயில்யம் : விருப்பம் நிறைவேறும். சிம்மம் ஜூன் 10, 2022 அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். பூரம் : திறமைகள் வெளிப்படும். உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். கன்னி ஜூன் 10, 2022 பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் மூலம் சாதகமான உதவி கிடைக்கும். குழப்பம் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு உத்திரம் : நெருக்கடிகள் குறையும். அஸ்தம் : திருப்தியான நாள். சித்திரை : உதவி கிடைக்கும். துலாம் ஜூன் 10, 2022 பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் ஆதரவால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளின் மூலம் லாபத்தை பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் சித்திரை : குழப்பம் நீங்கும். சுவாதி : விழிப்புணர்வுடன் செயல்படவும். விசாகம் : புதுமையான நாள். விருச்சிகம் ஜூன் 10, 2022 உத்தியோகம் சார்ந்த பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்களும், மந்தத்தன்மையும் குறையும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் விசாகம் : அனுசரித்து செல்லவும். அனுஷம் : ஆதரவான நாள். கேட்டை : வெற்றி கொள்வீர்கள். தனுசு ஜூன் 10, 2022 தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மூலம் : சேமிப்பு அதிகரிக்கும். பூராடம் : எண்ணங்கள் ஈடேறும். உத்திராடம் : இன்னல்கள் குறையும். மகரம் ஜூன் 10, 2022 தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் உத்திராடம் : நெருக்கடிகள் குறையும். திருவோணம் : சாதகமான நாள். அவிட்டம் : தேவைகள் நிறைவேறும். கும்பம் ஜூன் 10, 2022 புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும், புதிய நம்பிக்கையும் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். சதயம் : பொறுமையுடன் செயல்படவும். பூரட்டாதி : நம்பிக்கை கிடைக்கும். மீனம் ஜூன் 10, 2022 உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையான சூழ்நிலையும் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவினர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும். உத்திரட்டாதி : குழப்பம் உண்டாகும். ரேவதி : நிதானம் வேண்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended