இன்றைய ராசி பலன்கள் (09-06-2022)

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 09, 2022 வழக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் லாபம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் அஸ்வினி : தீர்வு கிடைக்கும். பரணி : மகிழ்ச்சியான நாள். கிருத்திகை : மாற்றம் ஏற்படும். ரிஷபம் ஜூன் 09, 2022 விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும். ரோகிணி : திறமைகள் வெளிப்படும். மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும். மிதுனம் ஜூன் 09, 2022 பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும். திருவாதிரை : சிந்தித்து செயல்படவும். புனர்பூசம் : சாதகமான நாள். கடகம் ஜூன் 09, 2022 உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான விருப்பம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். சோர்வு நீங்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். பூசம் : ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் : மாற்றம் ஏற்படும். சிம்மம் ஜூன் 09, 2022 குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சோர்வான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் மகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். பூரம் : அனுபவம் உண்டாகும். உத்திரம் : முதலீடுகள் மேம்படும். கன்னி ஜூன் 09, 2022 இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். எந்தவொரு செயல்பாட்டிலும் பொறுமையை மேற்கொள்வது நல்லது. தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளியூர் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் உத்திரம் : இழுபறிகள் அகலும். அஸ்தம் : பொறுமையை கையாளவும். சித்திரை : பயணங்கள் அதிகரிக்கும். துலாம் ஜூன் 09, 2022 அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் சித்திரை : தாமதங்கள் குறையும். சுவாதி : குழப்பம் உண்டாகும். விசாகம் : ஆதாயம் ஏற்படும். விருச்சிகம் ஜூன் 09, 2022 வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரம் நிமிர்த்தமான கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புத்துணர்ச்சியுடனும், செயல்பாடுகளில் துரிதமுடனும் காணப்படுவீர்கள். வரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும். அனுஷம் : கவலைகள் நீங்கும். கேட்டை : துரிதம் உண்டாகும். தனுசு ஜூன் 09, 2022 வியாபார பணிகளில் புதிய ஆலோசனைகளும், மாற்றங்களும் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதில் கவனம் வேண்டும். எதிர்பாராத வரவு உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மூலம் : ஆலோசனைகள் கிடைக்கும். பூராடம் : சிந்தித்து செயல்படவும். உத்திராடம் : வரவு உண்டாகும். மகரம் ஜூன் 09, 2022 கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான தனவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். திருவோணம் : மாற்றம் உண்டாகும். அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும். கும்பம் ஜூன் 09, 2022 ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிக்கல்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும். சதயம் : நெருக்கடியான நாள். பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும். மீனம் ஜூன் 09, 2022 குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். பாசம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். உத்திரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள். ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

VIDEOS

RELATED NEWS

Recommended