இன்றைய ராசி பலன்கள் (06-06-2022)

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 06, 2022 புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் மேம்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும். பரணி : அன்யோன்யம் மேம்படும். கிருத்திகை : இலக்குகள் உண்டாகும். ரிஷபம் ஜூன் 06, 2022 வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். ரோகிணி : கவனம் வேண்டும். மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும். மிதுனம் ஜூன் 06, 2022 மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் அமையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான சூழல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும். புனர்பூசம் : சாதகமான நாள். கடகம் ஜூன் 06, 2022 வாக்கு சாதுர்யத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாசனை திரவியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும். பூசம் : ஆர்வம் உண்டாகும். ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும். சிம்மம் ஜூன் 06, 2022 மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். பூமி விருத்தி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதற்குண்டான முயற்சிகள் மேலோங்கும். அனுபவம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மகம் : தயக்கம் குறையும். பூரம் : அமைதியின்மை உண்டாகும். உத்திரம் : முயற்சிகள் மேலோங்கும். கன்னி ஜூன் 06, 2022 புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : மாற்றமான நாள். அஸ்தம் : அனுசரித்து செல்லவும். சித்திரை : விரயங்கள் உண்டாகும். துலாம் ஜூன் 06, 2022 கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், அமைதியும் உண்டாகும். துன்பம் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் சித்திரை : முன்னேற்றமான நாள். சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். விசாகம் : தெளிவு உண்டாகும். விருச்சிகம் ஜூன் 06, 2022 வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உலகியல் அனுபவங்களின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் விசாகம் : பயணங்கள் கைகூடும். அனுஷம் : மாற்றம் ஏற்படும். கேட்டை : நெருக்கடியான நாள். தனுசு ஜூன் 06, 2022 வழக்கு தொடர்பான விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களுடனான சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மூலம் : நுணுக்கங்களை அறிவீர்கள். பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும். மகரம் ஜூன் 06, 2022 மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதிகார பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உடற்பயிற்சி தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிரமம் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும். அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும். கும்பம் ஜூன் 06, 2022 ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். சதயம் : லாபம் மேம்படும். பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். மீனம் ஜூன் 06, 2022 உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனைகளில் தெளிவான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். சாதனைகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும். உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும். ரேவதி : சோர்வான நாள்.

VIDEOS

RELATED NEWS

Recommended