இன்றைய ராசி பலன்கள் (05-06-2022)

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 05, 2022 எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : அலைச்சல் உண்டாகும். பரணி : பொறுமையுடன் செயல்படவும். கிருத்திகை : மனஅமைதி கிடைக்கும். ரிஷபம் ஜூன் 05, 2022 உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் கிருத்திகை : உற்சாகமான நாள். ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும். மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள். மிதுனம் ஜூன் 05, 2022 சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதமும், விவேகமும் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தாமதங்கள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும். திருவாதிரை : பயணங்கள் கைகூடும். புனர்பூசம் : நம்பிக்கை ஏற்படும். கடகம் ஜூன் 05, 2022 எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும். பூசம் : தேடல் அதிகரிக்கும். ஆயில்யம் : பொறுமை வேண்டும். சிம்மம் ஜூன் 05, 2022 எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் மகம் : சேமிப்பு குறையும். பூரம் : கவனம் வேண்டும். உத்திரம் : கட்டுப்பாடுகள் குறையும். கன்னி ஜூன் 05, 2022 வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் உத்திரம் : முன்னேற்றமான நாள். அஸ்தம் : தெளிவு பிறக்கும். சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். துலாம் ஜூன் 05, 2022 வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பயணங்களின் போது புதிய அனுபவம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். புதிய துறை சார்ந்த தேடல் மற்றும் அதை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : மந்தமான நாள். சுவாதி : அனுபவம் உண்டாகும். விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும். விருச்சிகம் ஜூன் 05, 2022 நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் விசாகம் : தடைகள் குறையும். அனுஷம் : கவனம் வேண்டும். கேட்டை : இடமாற்றம் கைகூடும். தனுசு ஜூன் 05, 2022 வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களையும், வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு மூலம் : அனுசரித்து செல்லவும். பூராடம் : நிதானம் வேண்டும். உத்திராடம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும். மகரம் ஜூன் 05, 2022 உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத உதவியின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அசதி குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். திருவோணம் : முன்னேற்றமான நாள். அவிட்டம் : உதவி கிடைக்கும். கும்பம் ஜூன் 05, 2022 குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். சதயம் : உதவி கிடைக்கும். பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். மீனம் ஜூன் 05, 2022 வாழ்க்கை துணைவர் வழியில் பொருட்சேர்க்கை உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தவறிப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நேர்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும். உத்திரட்டாதி : தெளிவு ஏற்படும். ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended