இன்றைய ராசி பலன்கள் (02-06-2022)

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 02, 2022 முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் அஸ்வினி : வெற்றிகரமான நாள். பரணி : புரிதல் உண்டாகும். கிருத்திகை : சாதகமான நாள். ரிஷபம் ஜூன் 02, 2022 இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். பயணங்களின் போது பிறமொழி பேசும் மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் கிருத்திகை : வரவு மேம்படும். ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும். மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும். மிதுனம் ஜூன் 02, 2022 மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள். திருவாதிரை : இலக்குகள் பிறக்கும். புனர்பூசம் : லாபம் மேம்படும். கடகம் ஜூன் 02, 2022 வியாபார பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். முன்கோபமின்றி எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகம் ரீதியான செயல்பாடுகளில் சாதகமான முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு சார்ந்த துறைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் புனர்பூசம் : தாமதங்கள் குறையும். பூசம் : பொறுமையுடன் செயல்படவும். ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும். சிம்மம் ஜூன் 02, 2022 செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான தருணங்கள் உண்டாகும். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மகம் : புத்துணர்ச்சியான நாள். பூரம் : செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் : ஆதரவு கிடைக்கும். கன்னி ஜூன் 02, 2022 பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும். சித்திரை : அனுசரித்து செல்லவும். துலாம் ஜூன் 02, 2022 எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தாமதம் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : அதிர்ஷ்டகரமான நாள். சுவாதி : திறமைகள் வெளிப்படும். விசாகம் : வாய்ப்புகள் அமையும். விருச்சிகம் ஜூன் 02, 2022 உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். அனுஷம் : கருத்துக்களை தவிர்க்கவும். கேட்டை : சிந்தித்து செயல்படவும். தனுசு ஜூன் 02, 2022 உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : மேன்மையான நாள். பூராடம் : அனுகூலம் ஏற்படும். உத்திராடம் : எண்ணங்கள் உண்டாகும். மகரம் ஜூன் 02, 2022 சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தொழில் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். சிக்கல் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் உத்திராடம் : இழுபறிகள் அகலும். திருவோணம் : அனுபவம் ஏற்படும். அவிட்டம் : முன்னேற்றமான நாள். கும்பம் ஜூன் 02, 2022 குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். மீனம் ஜூன் 02, 2022 மனதில் தாய் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் பூரட்டாதி : கவலைகள் நீங்கும். உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும். ரேவதி : லாபம் அதிகரிக்கும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended