இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு 12.7.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சேலம் : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று சேலம் அண்ணா பூங்கா அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர் __________________________ ஈரோடு: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். __________________________ கோவை மாவட்டத்தில் : அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒபிஎஸ் புகைப்படம் அகற்றம் செய்தும், புகைப்படங்களை கிழித்தும் ஒபிஎஸ்க்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி இபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். ______________________ ராமநாதபுரம் : மண்டபம் அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம். __________________________ திருப்பூர் : ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் கற்களை வீசி மோதிகொண்டனர். தடுக்க முயன்ற நபரையும் மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பை ஏற்படுத்தியது __________________________ விழுப்புரம் : விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை இடையே கூடுதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். __________________________ திருவள்ளூர் : கும்மிடிபூண்டியில் இன்று காலை மேட்டு காலனியை சேர்ந்த ஆனந்த் (29) என்பவர் குருவாடிச்சேரி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் இருந்து தனது 3 குழந்தைகளை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றபோது வாலிபர்கள் 3 பேர், கஞ்சா போதையுடன் அவரை வழிமடக்கியதுடன் ஆனந்தை சரமாரியாக தாக்கி ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் குழந்தை கதறியதால் மேட்டு காலனி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்ததும் குழந்தையை விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டது கும்பல். போதை கும்பலை கைது செய்ய பொதுமக்கள் திரண்டுவந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதுச்சேரி ரெசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தியது. புதுச்சேரி தனியார் ரெசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜிக்கு சம்மன் அனுப்பி கோவை வரவழைத்து விசாரித்தது. __________________________ திருவள்ளூர் : பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடி தனுஷ்(19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற தனுஷை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. __________________________ திருவண்ணாமலை : ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. __________________________ விழுப்புரத்தில் ,உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது

VIDEOS

RELATED NEWS

Recommended