இன்றைய முக்கிய செய்திகள் 9.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி : பணயபுரம் அருகே அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் கார் & பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4பேர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகதீஸ் , மகேஷ் , ஜெகன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. நடைபயிற்சி மேற்கொண்ட ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கடலூர் : வேப்பூர் தனியார் மருந்தகத்தில் நேற்று ஊசி போட்டு கொண்ட குழந்தை ரஞ்சிதா(5) இன்று உயிரிழப்பு என புகார்... விருத்தாசலம் சரக மருந்தக ஆய்வாளர் வேப்பூர் தனியார் மருந்தகத்தில் சோதனை. சென்னை : கோயம்பேட்டில் தேமுதிக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை தீ வைத்து கொளுத்திய வழக்கில் ராமு என்பவர் கைது... தண்ணீர் இல்லாததால் பந்தலை தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம். திருப்பூர் : தாராபுரம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து விபத்து. சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு - 3 பேர் படுகாயம். வேலூர் : தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் இன்று 39.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவால் மக்கள் அவதி. சென்னை : மயிலாப்பூரில் கொல்லப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் காவல், வருவாய்த்துறை முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. மாமல்லபுரம் அருகே பண்ணைவீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, ஸ்ரீகாந்தின் கழுத்தில் கத்திகுத்து காயம், அனுராதாவின் முகம் பலித்தின் பையால் மூடப்பட்டு இருந்தது என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை : பூவிருந்தவல்லி அருகே அகரமேல் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து கரும்புகை வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி : கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஜீரோ பாயிண்டில் அமைச்சர் சாமு. நாசர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம மக்கள் மலர்த்தூவி வரவேற்றனர். திண்டுக்கல் : விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended