Author: THE GREAT INDIA NEWS

Category: district

கரூர் : ப்ரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டால் கரூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ப்ரீ பயர் கேமின் User id, Password-ஐ சகநண்பர்கள் திருடிச்சென்றதால் வாட்ஸ் அப்-பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்துகொண்டார். சேலம் : ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பைத்தூர் ஊராட்சியில் புங்கவாடி ஒன்றியக் குழு உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் 15வது நிதிக்குழு மானியத்தில் புதூரில் உலர் களம் அமைக்கும் இடத்தினை ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் Dr A.பத்மினி பிரியதர்சினி செழியன் அவர்கள் ஆய்வு செய்தார். வேலூர் : 57 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் இன்று முதல் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர். கன்னியாகுமரி : முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை செய்து 21 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த திரேசம்மாள், மகள் மேரியை கொலை செய்த நபர்களை போலீஸ் தேடி வருகிறது. சேலம் : காவிரி உரிமைக்கான ரயில் மறியல் போராட்டம் வழக்கில் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார் பாமகவின் ஜி.கே.மணி. சேலம் : நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பஸ் செட் பணிகளை நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் S.R.பார்த்திபன். நீலகிரி : தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான "புதியன விரும்பு" என்ற 5 நாள் கோடை சிறப்பு பயிற்சி முகாமில் தமிழக அரசின் கல்வித்துறை செயலர் திருமதி காகர்ல உஷா பயிற்சியின் போது சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இராமநாதபுரம் : ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பனை அடுத்த சின்னப்பாலம் கடற்கரையில் சுமார் ஐந்து வயது நிரம்பிய டியூகாங்க் எனப்படும் கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கோயம்புத்தூர் : மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4-க்குட்பட்ட சரவணம்பட்டி பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டார் மேயர் கல்பனா. கழிவுநீரை உடனடியாக அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடலூர் : புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதா கைது. காவலர் செல்வகுமாருக்கு ₨5 லட்சம் வழங்கிய நிலையில் ₨12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக புகார்… காவலரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0