Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் : திட்டக்குடி அருகே ராமநத்ததில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். இவர் மருந்தகம் ஒன்றில் கருக்கலைப்பு செய்ததை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி : பி.என்.டி காலனி, மூன்றாவது மேயில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை. நாமக்கல் : தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை முன்னிட்டு மரம் நடும் விழா இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி : ரூ.2,411,16 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் திரு. பி. என். ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. சேலம் : முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, ஓராண்டு சாதனை மலரை மாநகராட்சியில் மைய அலுவலகத்தில் மேயர் திரு ராமச்சந்திரன் வெளியிட்டார். தருமபுரி : ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த தொகுப்பை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டார். தருமபுரி : அதியமான் கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தருமபுரி எம் பி செந்தில்குமார் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அலுவலர்களை சந்தித்து முயற்சி மேற்கொண்டதால் பணி வேகமாக நடைபெறுகிறது. திருப்பூரில் : GST பணத்தை பெற தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்த தொழிலதிபரிடம் ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தரை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு காவல்துறை. சென்னையில் : பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் சரவணகுமார் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல். கோவையில் : தனியார் தாங்கும் விடுதியில் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்து திட்டமிட்டு கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூரில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ரூ.14 லட்சத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் : உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு எத்திலின் மூலம் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல். திண்டுக்கல் : அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. திருச்சி : திருவெறும்பூர் அருகே நடராஜபுரத்தில் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #kanchipuramnewstodaytamil
Comments & Conversations - 0