இன்றைய முக்கிய செய்திகள் 6.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்ம நபர் ஒருவர் ரயில் வரும்போது பைக்கை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பைக் எரிவதை பார்த்து 100 மீட்டர் முன்பாகவே ரயிலை ஓட்டுநர் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எரிந்துக் கொண்டிருந்த பைக்கை போலீசார் அப்பிரபடுத்தியபின் 45 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. சென்னை : ஆவடி அருகே கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். அசோக் நிரஞ்சன் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபத்து ஏற்பட்டது. விஷ வாயு தாக்கிய மற்றொரு தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர் . புதுக்கோட்டை : அறந்தாங்கியில் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் A1 பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் கவிதாராமு உத்தரவால் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். பிரியாணி சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட 14 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை : 52 ஷவர்மா உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அழுகிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட 5 உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விருதுநகர் : சாத்தூர் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். வெடி விபத்தில் ஒருவர் இறந்த நிலையில் தலைமறைவாக ஆலை உரிமையாளரை காவல்துறை கைது செய்தது. சென்னை : போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பக்கவாட்டு கண்ணாடி இல்லாத 679 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சூரிய ஒளி புகாத கருப்பு பிலிமை வாகன ஜன்னல்களில் அகற்றாத 292 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். சிவகங்கை : நேரு பஜாரில் காய்கறிகள் வாங்க சென்ற முதியவர் பாண்டி (70) மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஊத்திக்குளத்தைச் சேர்ந்த பாண்டி, வெயில் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். சென்னை : ராயப்பேட்டையில் உரிமமின்றி இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உரிமம் பெறாமல் போதை மறுவாழ்வு மையங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மனநல ஆணையம் தெரிவித்தது. திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தின் 1-வது அழகில் 600 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது நிலையின் முதல் அழகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. சென்னை : சேர்ந்த 2 காவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் கிரிப்டோ கரன்சியில் ரூ.1.5 கோடியை இழந்துள்ளனர். ஒரு காவலர் ரூ.1.24 கோடியும் மற்றொரு காவலர் ரூ.20.67 லட்சமும் கிரிப்டோவில் இழந்தது அம்பலமானது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்களே போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் அறிக்கையிட்டார். கரூர் : வெடிச்சிபாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியை கையகப்படுத்தி முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். பல்வேறு விதிமீறல் புகார் அடிப்படையில் உதவிபெறும் பள்ளி கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு நேரடி மானியம் பெறுவதாகவும் பள்ளியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வேலூர் : பாஸான மாணவனை மீண்டும் 10ம் வகுப்பு படிக்க வைத்த விவகாரம்: 5 ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தேர்ச்சி பெற்றது தெரியாமல், மீண்டும் 10ம் வகுப்பிலேயே மாணவன் படித்து வந்த நிலையில், 5 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி : பெரியகுளம் அருகே நஞ்சபுரத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாக புகார். 9ம் வகுப்பு வரை படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு. தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். தேனி : பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி - காமக்கபட்டி பகுதியில் கனமழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை, தென்னை சேதமடைந்தது. சூறாவளியால் சேதமுற்ற வாழை, தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். தனக்கு 30 நாள் பரோல் வழங்கக் கோரி தண்ணீர் கூட அருந்தாமல் முருகன் இருப்பதாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,salem news,tuticorin news,dindigul news,Thirupur news,pudukottai news,cudaloore news,coimbatore news today,chengalpet news today tamil,sivagangai news today tamil,Rameshwaram news today tamil

VIDEOS

RELATED NEWS

Recommended