இன்றைய முக்கிய செய்திகள் 4.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்றைய செய்திகள் நெல்லை : மேலப்பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொழுகை நடந்தது. மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடந்த சிறப்புத் தொழுகையில் தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி : அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணி காளியம்மாள், அவரது மகள் கார்த்திகா ஆகியோர் பலியாகினர். சென்னை : ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ராஜ்(45) என்பவர் உயிரிழந்துள்ளார். மறுவாழ்வு மைய ஊழியர்கள் மோகன், ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை. சென்னை : அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நிலை சரியில்லாத வெள்ளைப் புலியை பரிசோதிக்க முயன்றபோது ஊழியர் செல்லையாவை தாக்கியதாக கூறப்படுகிறது. வெள்ளைப்புலி தாக்கியதில் காயமடைந்த ஊழியர் செல்லையா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார். திருவள்ளூர் : பெரியபாளையத்தில் தேன்கனி என்பவர் நடத்திவரும் உரக்கடையில் மேற்கூரையை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த விற்பனை பணம் ரூ. 2லட்சத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர். சென்னை : எழும்பூர் நீதிமன்றத்தில் முத்திரைகளை திருடிய ஊழியர் விவேகானந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மொழி பெயர்ப்பாளர் அறையில் புகுந்து விவேகானந்தன் முத்திரைகளை திருடியுள்ளார். கோவை : அருகே அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்தன ஷட்டரை உடைத்து மளிகைக்கடையை சூறையாடின 3 காட்டு யானைகள். சேலம் : கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், 4 பணிமனைகளில் சோலார் மூலம் தினமும் 320 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வேலூர் : ரோந்து வாகனத்தின் ஜிபிஎஸ் கருவியை ஆஃப் செய்த 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வடக்கு காவல்நிலையை எஸ்.ஐ.குமார், குற்றப்பிரிவு காவலர் ஐயப்பன் மீது எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். இரவு ரோந்து செல்லும்போது வாகனத்தின் ஜிபிஎஸ் கருவியை ஆஃப் செய்த புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,salem news,tuticorin news,dindigul news,Thirupur news,pudukottai news,cudaloore news,coimbatore news today,chengalpet news today tamil

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended