இன்றைய முக்கிய செய்திகள் 31.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி : இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார். இவர் திருச்சி பொன்மலையிலுள்ள தனியார்ப் பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்றுள்ளார். இந்நிலையில், இவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி காவல்துறை கைது செய்துள்ளது. மதுரை : விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தெரு நாய்கள், பூனைகள் உள்ளிட்ட சிறு பிராணிகளை காக்க விலங்குகள் நல ஆர்வலர் சாய் மயூர் ஹாசியா என்பவர் ஆம்புலன்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். முதலுதவி பெட்டி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள இந்த ஆம்புலன்ஸில் ஆதரவற்றோரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக ஹாசியா கூறியுள்ளார். நாமக்கல் : புது சத்திரத்தில் வழிப்பறி செய்து 19 லட்ச ரூபாய் திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் : செஞ்சி அருகே வழக்கறிஞர் ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்சாசேரி கிராமத்தசேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம், மதுபோதையில் சாலையில் சென்றவர்களை செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. தேனி : மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல், வேகமாக கார் ஒன்று கடந்து சென்றது. அப்போது காரின் மேல் பகுதியில் இருந்த ஸ்டெப்னி டயர் பறந்து வந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர் மீது விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர். கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை அறநிலையத்துறையின் ஒருங்கிணைப்பு குழு ஆய்வு செய்ய பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத நம்பிக்கைக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சென்னை : மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் காலை முதல் தற்போது வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது ஷிப்ட் வந்த தொழிலாளர்கள் நுழைவுவாயில் முன்புறம் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை : பெரும்பாக்கத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (34), இவர் தேனாம்பேட்டையை சேர்ந்த இவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சுந்தரமூர்த்தியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். கோவை : களைகட்டியது பரளிக்காடு சூழல் சுற்றுலா: சுற்றுலா பயணிகளுக்கு உணவளித்தனர் பழங்குடியினர். சிவகங்கை : தெ.புதுக்கோட்டை பகுதியில் நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் செய்த விவகாரம் நாளை பணி ஓய்வு பெற இருந்த வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்… தெ. புதுக்கோட்டை கிராமத்தில் பணியாற்றிய கிராம உதவியாளரும் சஸ்பெண்ட். இந்த விவகாரத்தில் ஏற்கனவே துணை வட்டாட்சியர், வி.ஏ.ஓ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended