Author: THE GREAT INDIA NEWS

Category: district

சேலம் : உடையார்பட்டியில் பழனியப்பன் என்பவரின் மசாலா அரவை ஆலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கலப்பட மசாலா பொடி தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அரவை அலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி : ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி படகு சவாரி நிறுத்தம். ஈரோடு : பெருந்துறை அருகே விஷ்ணுதீபக் என்ற மருத்துவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றநிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அவர்கள் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் : அருகே ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் லாரி திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீப்பற்றி எரிந்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. திருப்பூர் : அமராவதி, உடுமலை வனச்சரகத்தில், செல்போன் செயலி, ஜிபிஆர்எஸ் கருவிகள் உதவியுடன் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நாமக்கல் : ஆட்சியர் அலுவலக மேல்தளத்தில் 50 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பினை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஸ்ரேயா பி. சிங் இன்று திறந்து வைத்தார். கரூர் : மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வெங்கமேடு, தாந்தோன்றிமலை, காந்தி கிராமம், வையாபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நீலகிரி : கூடலூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கக் கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். யானையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மெத்தமனாக இருப்பதாக கூறி எல்லமலை சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆரூற்று பாறை பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஆனந்த் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0