இன்றைய முக்கிய செய்திகள் 28.4.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திண்டுக்கல் : எரியோடு அருகே மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டிய புகாரில் உடற்கல்வி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கே.ராமநாதபுரம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனியப்பனை லிங்கவாடி பள்ளிக்கு மாற்றி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கே.ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தவறாக வழி நடத்துவதாக சக ஆசிரியர்கள் புகார் தெரிவித்திருந்தனர். புதுக்கோட்டை : அருகே முகமது நிஜாம் என்பவரை கொன்று 175 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம். முகமது நிஜாம் வீட்டில் அனுதாபப்பட்டு தங்க வைக்கப்பட்டவர்களே கைவரிசையா என்ற கோணத்தில் இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை. கோவை : ஈக்கள் தொல்லை ,திம்ம நாயக்கன் பாளையத்தில் பல ஆயிரம் ஈக்கள் படையெடுப்பால் தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல் மக்கள் அவதி. சேலம் : அரசு கல்லூரி பேராசிரியரை பணி இடைநீக்கம் செய்து உயர் கல்வித்துறை இயக்குனர் பூர்ணசந்திரன் உத்தரவு; தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சீனிவாசன் மீது பேராசிரியை புகார் தெரிவித்து இருந்த நிலையில் நடவடிக்கை. திருவள்ளூர் : மணலி புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன் கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர், ரவிச்சந்திரனை கொலை செய்து செல்பி எடுத்து அதை நண்பர்களுக்கு அனுப்பியதால் 4 பேரும் சிக்கினர். ரவிச்சந்திரனை போதையில் வெட்டியும், கல்லை போட்டும் ஒன்றா மதன்குமார், ஜெயபிரகாஷ், தனுஷ், பரத் கைதாகினர். சென்னை : விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 3ம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலக காவல் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். சென்னை : போரூர் அருகே சாலையோரம் சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை அதிக அளவில் வெளியாவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குப்பையில் பற்றிய தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . சென்னை : பீஸ்ட், கேஜிஎப் உள்ளிட்ட புதிய படங்களை டவுன்லோடு செய்து விற்ற 5 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். பாரிமுனை பர்மா பஜார் பகுதியில் மெமரி கார்டுகளில் பதிவேற்றிக் கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான முகமது ஜலீல், பீர்முகமது, முகமது யூசுப், செல்வம், கண்ணன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரின் சோதனையில் ரூ.53 லட்சம் சிக்கியது. பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது ஆந்திராவை சேர்ந்த இளைஞரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் நகைகளை விற்ற பணம் என போலீசாரிடம் தெரிவித்த நிலையில் வருமானவரித்துறையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் : கொல்லிமலை சேவூர் நாடு பகுதியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கால்நடைகளுடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.12 கோடி மதிப்பிலான 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து பெங்களூருவைச் சேர்ந்த மத்திய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,salem news,tuticorin news,dindigul news,Thirupur news,pudukottai news,cudaloore news,coimbatore news today,chengalpet news today tamil

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended