இன்றைய முக்கிய செய்திகள் 2.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கன்னியாகுமரி : உடும்பு வேட்டையாளர்கள் கைது. கன்னியாகுமரிபூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட தெற்கு மலைப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது , 4 உடும்பு & 2 வேட்டை நாய்கள் பறிமுதல். கன்னியாகுமரி விபத்து ஒருவர் பலி இருவர் காயம். கன்னியாகுமரிநாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விசுவாசபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் மணி என்பவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம். சென்னை : கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி அசாமில் கைது. சென்னை பாரிமுனை பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஓர் ஆண்டுக்கு பின் அசாமில் கைது. சதீஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பகதூர் என்பவரை கைது செய்தது காவல்துறை. தஞ்சை : தேர் விபத்து இரண்டாம் நாளாக விசாரனை. தஞ்சை கரிமேட்டில் தேர் விபத்து நடந்த பகுதியில் ஒரு நபர் குழுவினர் 2வது நாளாக விசாரணை நடத்தினர். வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையிலான குழுவினர் தேர் விபத்து பகுதியில் விசாரணை நடத்தினர். திருவாரூர் : கஞ்சா பறிமுதல் திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே கடற்கரை சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல். ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து தஞ்சை தனிப்படை போலீசார் விசாரணை. நாகை : தேர் விபத்து விசாரனை நாகையில் தேர் விபத்து நடந்த இடத்தில் வருவாய்த்துறை செயலாளர் தலைமையிலான குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர். கோவில் , 4 வீதிகள் , தேர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி : 8 துப்பாக்கி தோட்டாக்கள் தூத்துக்குடி கோவில்பட்டி , சீனிவாச நகரில் உள்ள வீட்டில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் - பெண்ணிடம் போலீசார் விசாரணை. ராமநாதபுரம் : மாணவன் தூக்கிட்டு தற்கொலை. ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை. வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு : மாணவி உடல் ஒப்படைப்பு. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் ஒப்படைப்பு. மாணவி கவிபிரியாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராக்கிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர். மாவட்ட நிர்வாகத்தின் 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் கவிபிரியாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். சென்னை : எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு பள்ளி பற்றிய தகவல்களை அப்டேட் செய்யப்படும்  எமிஸ் ஆப்பின் பெயர் தற்போது TNSED ( Tamilnadu School Education ) என மாற்றம் செய்துள்ளது கல்வித்துறை. கடந்த ஒரு வாரமாக அப்டேட் செய்யப்பட்ட EMIS இணையதளம் இனியாவது வேகமாக செயல்படுமா?? இன்றைய செய்திகள் கும்பகோணம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kumbakonam flash news,kumbakonam todays news tamil,ramanathapuram latest news,Grama sabha,kanchipuram news today,chengalpet latest tamil news,thanjavur news today tamil,nagapatinam latest news tamil,thiruvarur news today,kanyakumari news,tuticorin latest news tamil

VIDEOS

RELATED NEWS

Recommended