இன்றைய முக்கிய செய்திகள் 21.6.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் : சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமிக்கு கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது குறித்து சமூக நல அலுவலரிடம் புகார் அளித்து இருந்தனர். குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு. சிறுமிக்கு திருமணம் நடந்ததுகுறித்து கடலூர் மாவட்ட சமூகநல அலுவலர் சித்ராசிதம்பரம் போலீசில் புகார். __________________________ தருமபுரி : ஒகேனக்கல் பரிசல்துறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1000க்கு மேற்பட்ட பாதுகாப்பு உடைகள் எரிந்தது. தீ விபத்தில் 5 கும் மேற்பட்ட பரிசல்கள் , 2 வாகனங்கள் எரிந்தது. பாதுகாப்பு உடைகளுக்கு மர்ம நபர் தீ வைத்து தப்பிச்சென்றுள்ளதாக முதற்கட்டதகவல் வெளியாகியுள்ளது. __________________________ தூத்துக்குடி : கியு பிரிவு தனிப்படையினர் கடத்தல்காரர்களை படகில் வைத்திருந்த மூடைகளோடு அவர்களை கடற்கரை அருகில் வைத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் படகினை கடலுக்குள் வேகமாக எடுத்துச் செல்ல பின்னர் க்யூ பிரிவு போலீசாரும் படகில் பின்னால் துரத்திச் செல்ல 10 லட்சம் மதிப்புள்ள பீடி இலை சாக்குகளை தண்ணீரில் வீசிவிட்டு தப்பினர். அதில் சுமார் 40 மூடைகள் கைப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. __________________________ கிருஷ்ணகிரி : கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்கு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழை நேரத்தில் தனியார் நிறுவனங்கள் ரசாயன கழிவுகளை திறந்து விடுகிறது. எனவே, நீர்நிலைகள் மாசுபடுவது, சாலைகளில் நுரை பொங்கி வருகிறது. நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். __________________________ கோவை : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. செவ்வாழை ஒரு கிலோ ரூ.48 வரையிலும், பூவந்தார் கிலோ ரூ.35க்கும், மோரிஸ் ரூ.20க்கும், கேரள ரஸ்தாளி ரூ.48க்கும், நேந்திரன் கிலோ ரூ.55க்கும் என கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. __________________________ சென்னை : சூளைமேட்டில் ஆன்லைன் கடன்செயலி மூலம் பணம்பெற்று திருப்பிச் செலுத்தமுடியாத இளைஞர் தற்கொலை. புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்து பாண்டியன் தற்கொலை __________________________ திருவாரூர் : கோவிட்19 காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மன்னார்குடி - மயிலாடுதுறை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி __________________________ அரியலூர் : ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிமிருந்து கோரிக்கை மனுக்களை அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பெற்றுக் கொண்டார். __________________________ சென்னை : பகலில் வெயில் அதிகமாக இருந்தது. மாலையில் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி __________________________ புதுச்சேரி : முத்தியால்பேட்டை அக்கரகாரம் வீதியில் மின்சாரம் தாக்கி தேன்மொழி மற்றும் கணேசன் ஆகியோர் உயிரிழப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended