இன்றைய முக்கிய செய்திகள் 20.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் : தமிழகஅரசின் ஆணையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பிற்காக கோயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தென்காசி : குற்றாலம் மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. சேலம் : கோடை வெயில் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் தொடர் மழை காரணமாக பனிப்போர்வையுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் ஏற்காடு மலைப்பாதையை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நாகை : வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. பெரம்பலுார் : 5,947 விவசாயிகளிடமிருந்து 19,176.400 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி : இன்று நண்பகல் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியது. நெல்லை : மணிமுத்தாறு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடையால் வந்த பயணிகள் ஏமாற்றம். திருவண்ணாமலை : ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார். ஊராட்சி செயலாளர் ரமேஷை பணியிடைநீக்கம் செய்தும் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருக்கிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற புகாரில் இருவர் மீதும் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். நெல்லை : அடைமிதிப்பான்குளம் கல்குவாரிக்கு சொந்தமான அலுவலகத்தின் பூட்டை உடைத்து சோதனை நடைபெற்றது. கல்குவாரி அலுவலகத்தின் பூட்டை உடைத்து நாங்குநேரி ஏ.எஸ்.பி. ராஜா சதுர்வேதி தலைமையில் ஆவணங்களை கைப்பற்றி போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. கல்குவாரி அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில்நடைபெற்ற தேர் திருவிழாவில் 2 பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியும் திருட்டு நடைபெற்றுள்ளது. அரியலூர் : உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார். படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறு நீரில் விழுந்த சுவேதா என்ற மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended