Author: THE GREAT INDIA NEWS

Category: district

நெல்லை : ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்பு கோடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் கைப்பாவையாக தமிழ்நாடு ஆளுநர் ரவி செயல்படுவதாக கூறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளியே இருபுறங்களிலும் இருந்த கடைகளில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 36 கடைகளுக்கு மேல் தீயில் எரிந்து சாம்பலானது. அந்த கடைகளில் இருந்து பொருட்கள் அகற்றப்படாமலேயே இருந்து வந்த நிலையில், பொருட்களை அகற்றும் வேலை நடந்தது. திருச்சி : அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே சந்திப்பு முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் காவலர்கள் அவர்களை கைது செய்தனர். புதுக்கோட்டை : அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை. நாமக்கல் : அக்கியம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் பணிகளை மாநில பால்வளத்துறை அமைச்சர் திரு. சா மு நாசர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர திரு. மதிவேந்தன் ஆகியோர் மேற்கொண்டனர். திருப்பத்தூர் : அருகே மழை நீரில் மூழ்கிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மக்களை தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்பு. கள்ளக்குறிச்சி : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான, மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சியர் திரு பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் : தமிழகத்திலேயே முதன் முதலாக பெரம்பலூரில் "அமோனைட்ஸ்" அருங்காட்சியகத்தை போக்குவரத்து துறை அமைச்சர் திரு சா.சி. சிவசங்கர் திறந்து வைத்தார். பெரம்பலூர் : ரூ 6.14 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை : புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, நாளை முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் திறக்கப்பட்டவுள்ள நிலையில் மாநில அமைச்சர்கள் திரு எ வ வேலு, திரு ஆர் காந்தி ஆகியோர் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை : பேட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டின் சுவரிலிருந்து டைல்ஸ் உடைந்து, பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையுடன் படுத்திருந்த தாய் மீது விழுந்து விபத்து ! உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை : கொடிசியா வளாகத்தில் முன்னோடி வங்கிகள் நடத்தும் 'கல்விக்கடன் மேளா ' நிகழ்ச்சியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார்.

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0