இன்றைய முக்கிய செய்திகள் 19.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நெல்லை : பட்டதாரி இளைஞர் தொடங்கிய கழுதைப் பண்ணை! பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கியுள்ளார். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் : பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் கூலி தொழிலாளி சடையாண்டி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்தபோது கூலித்தொழிலாளி சடையாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் : பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்ணை கட்டிக்கொண்டு காந்தி சிலை முன்னே தர்ணா போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி : விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் : ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு மக்கள் பயன்படும் வகையில் அரசு கட்டடங்களை அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட இருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதிகாரிகள். கும்மிடிப்பூண்டி அருகே நீா்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல். மதுரை : மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம்: தேனி மாவட்ட மக்கள் எதிர்ப்புகளுக்கு இடையே தடுப்பணைக்கு பூமிபூஜை. லோயர் கேம்பிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முல்லைப்பெரியாற்றங்கரை வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. மதுரை : பழங்காநத்தம் பகுதியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய சுகுமார் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பாலமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் : சாயல்குடி இரவு ரோந்து போலீசாரை ஆயுதங்கள் மூலம் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலையில் அமர்ந்து மது அருந்துயதை தட்டிக்கேட்ட காவலர்கள் மீது ஆயுதங்களால் கடுமையாக தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் : சிறைச் சாலையில் விசாரணை கைதி முருகன் (38) கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை என்பதால் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி : ஊர்க்காவல் படை வீரர் உதயம்(33) என்பவர் பாலியல் தொல்லை அளிப்பதாக பெண் குற்றச்சாட்டு. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended