இன்றைய முக்கிய செய்திகள் 10.6.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுரை : தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக மதுரையில் “உலக லெவல் கிராசிங்” விழிப்புணர்வு தினம் அனுசரிப்பு. லெவல் கிராசிங்கை மீறினால் என்னென்ன தண்டனை கிடைக்கும் என்பது பற்றி விளக்கம் தரப்பட்டது. திண்டுக்கல் : பழனி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. அப்போது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர் நகராட்சி ஊழியர்களை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு : நயன்தாரா திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் அருகே போக்குவரத்து நெரிசலால் அடுத்தடுத்து 3 விபத்து. யாருக்கும் காயமில்லை. வாகனம் மட்டுமே சேதம். மயிலாடுதுறை : சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்பு. தேனி : பெரியகுளம் அருகே பாப்பன்பட்டி கண்மாயில் குளித்த 2 சிறுவர்கள் உள்பட 3பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கண்மாயில் குளித்த சிறுவர்கள் சபரிவாசன், மணிமாறன் மற்றும் பன்னீர் என்பவர் நீரில் மூழ்கி பலியாகினர். திருவண்ணாமலை : செய்யாறு பகுதிகளில் அடுத்தடுத்து மாணவிகள், பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே தனிப்படை அமைத்து மாயமான பெண்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. கடலூர் : ஆபத்தாரணபுரத்தில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமானதால் திருமணம் நிறுத்தம். மணமகள் வீட்டார் சோகம். விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட 5 பெண்களிடம் தாலிச்சரடு நகைகள் 20 பவுன் திருட்டு. காஞ்சிபுரம் : வேகவதி ஆற்றின் கரையில் சுமார் 50 ஆண்டு காலமாக குடியிருந்து வந்தவர்களை காலி செய்ய உத்தரவு. இதனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். விழுப்புரம் : பள்ளிக்கல்வித் துறை சார்பாக வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா துவக்கி வைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended