இன்றைய முக்கிய செய்திகள் 10.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருப்பூர் : சிறுமியாகயிருக்கும்போது திருமணம் செய்து கொண்டாலும், தற்போது இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு திருப்பூரை சேர்ந்தவர் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்தது கோர்ட் . சேலம் : ஆத்தூர் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடமிருந்து கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பறிமுதல். திண்டுக்கல் : அரசு தலைமை மருத்துவமனைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஒளிப்பதிவாளர்களை படம் எடுக்க விடாமல் தடுத்து வெளியேற்றம். மருத்துவர்களை கண்டித்து செய்தியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். வேலூர் : குடியாத்தத்தில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மாவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் ஷவர்மா, அசைவ உணவுகளை விற்பனை கடைகளுக்கு சில் வைக்கப்படும் என்று நகர மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை : கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்தனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை : அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டதால் 46 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் பிரியாணியை பரிசோதனை செய்ததில் ஸ்டபைலோ காக்கஸ்ஆவ்ரஸ் பாக்டீரியா இருப்பது உறுதியானது, உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் பாக்டீரியா கண்டறியப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரியாணியின் ஆய்வு முடிவை வைத்து உணவு பாதுகாப்புதுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட அதிகாரி பிரவின்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே மலைத்தேனீ கொட்டியதில் கோவிந்தராஜ்(70) என்பவர் உயிரிழப்பு. கிருஷ்ணகிரி : பர்கூர் ஒன்றிய திமுக பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு. மதுரை : மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே மோதல். கஞ்சா பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் காயம் திருவாரூர் : மன்னார்குடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு. சேலம் : 34,650 ரூபாய் மதிப்பிலான 113 கிலோ கெட்டுப்போன சிக்கன், ஆட்டுக்கறி, மீன், நண்டு உள்ளிட்டவை பறிமுதல். 8 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம்; மேலும் 22 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended