இன்றைய முக்கிய செய்திகள் 5.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விருதுநகர் : சூலக்கரையை சேர்ந்தவர் முருகேசன். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி. இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தினேஷ் (18), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், தினேஷ் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் : வீராணம் அருகே 12ம் வகுப்பு மாணவி பிரகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் : கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தில் சாக்குமூட்டை தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உயிரிழந்தவர்கள் பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.60 கோடி அளவுக்கு முறைகேடுகள் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்ட வணிகவியல், குற்றவியல் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை : ராமாயன்பாட்டியல் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள்முழுக்க சிறை தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இளைஞர் விக்னேஷு (24) 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவருக்கு ஆயுள்முழுக்க சிறைத்தண்டனை விதித்தது போக்ஸோ நீதிமன்றம். மதுரை : மேல அனுப்பானடி பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் வெற்றிச்செல்வன் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி : கனிமொழி எம்பி குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எஸ்பியிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை : ஆரணி அருகே ஜூஸ் குடித்த 18 பெண்களுக்கு வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் சிகிச்சை.போலீசார் விசாரணை. விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் கரை உடைப்பு வெளியேறும் நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் வேதனை. சேலத்தில் : செயற்கை முறையில் பழுக்க வைத்த 3 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி : தேன்கனிக்கோட்டையில் ஆலங்கட்டியுடன் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்சசி. செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,salem news,tuticorin news,dindigul news,Thirupur news,pudukottai news,cudaloore news,coimbatore news today,chengalpet news today tamil

VIDEOS

RELATED NEWS

Recommended