இன்றைய முக்கிய செய்திகள் 16.6.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தஞ்சாவூர் : கும்பகோணம் சிவகுருநாதசுவாமி கோயிலில் இருந்த சோமாஸ்கந்தர் உள்ளிட்ட சிலைகள் திருட்டு. திருடப்பட்ட சிலைகளுக்கு மாற்றாக போலி சிலைகளை வைத்தது கண்டுபிடிப்பு. சேலம் : ஆட்சியர் அலுவலகத்தில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் முனைவர். ஆலின் சுனேஜா தலைமையில் இன்று ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை : கறம்பக்குடி அருகே தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்ட சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். தட்டாஊரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடம் தனக்கு சொந்தமானது என பூட்டு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி : சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திண்டுக்கல் : கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் மழை பெய்தது. கொடைக்கானல் நகர்ப்பகுதி, படகு குழாம், ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிகள் பகுதிகளில் மழை பெய்தது. மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருநெல்வேலி : இட்டேரி பகுதியில் விலை நிலங்களை சேதப்படுத்திய கரடி சிக்கியது. 3 மாதங்களாக சப்போட்டா, மா, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்த கரடியை வனத்துறையினர் பிடித்தனர். நாமக்கல் : ஆட்சியர் திருமதி. ஸ்ரேயா பி சிங் தலைமையில், முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்றுக்கொண்டனர். மதுரை : பல்வேறு இடங்களில் மழை. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருப்பத்தூர் : ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்று கொண்டனர். நீலகிரி : உதகமண்டலத்தில் மாநில வனத்துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் தலைமையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. ராணிப்பேட்டை : முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்தனர். திண்டுக்கல் : கொடைக்கானல் நகராட்சி பூங்கா எதிர்புறம் வாகனம் நிறுத்துவதற்கும் ரூபாய் 60 வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கேள்வி கேட்டால் கொடைக்கானல் நகராட்சி வசூல் செய்ய சொன்னதாக ஊழியர்கள் கூறுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர் : கும்பகோணம் அரசு கலை கல்லூரி முதல்வரை மாற்ற கோரி, பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம். யுஜிசி நிதியில் கல்லூரி முதல்வர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு. ராணிப்பேட்டை : கீழ்க்குப்பம் ஊராட்சியில் 370 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை மாநில அமைச்சர் திரு. காந்தி இன்று தொடங்கி வைத்தார். சேலம் : கோரிமேடு பகுதியில் 15 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் திரு. ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார். கோவை : ஆனைமலை புலிகள் காப்பகவனப் பகுதியை ஒட்டியுள்ள மலைக்கிராமத்தில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு ஏதுவாக பேட்டரி வாகனம் தன்னார்வ சேவை அமைப்பின் சார்பில் இன்று வழங்கப்பட்டது. ஈரோட்டில் : பரோட்டா குருமாவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு. பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்;மயக்கம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதி. பல்லி விழுந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஓட்டல் உரிமையாளர் மழுப்பலாக பதில் கூறியதாக புகார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended