இன்றைய முக்கிய செய்திகள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி : மணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழே விழுந்து கிடந்த விளம்பர பிளக்ஸ் போர்டை தூக்கும் போது 3 பெயிண்டர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. கடலூர் : விருத்தாச்சலம் வீட்டில் கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி : புங்கனூர் அருகே நெடுமலை வாடிவாசல் கருப்பு கோயில் பகுதியில் செக்குக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. செக்குக்கல்வெட்டு படியெடுத்து ஆய்வுசெய்த நிலையில் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. கரூர் : அருகே அச்சம்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதித்த சிறுமிக்கு தொல்லை தந்த காளிமுத்துக்கு தண்டனை அளித்து கரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார். சேலம் : மேட்டூர் அருகே நங்கவள்ளி மாமரத்து மேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த பத்து நாள்களாக இந்த கிராமத்தில் குடிநீர் விநியோகம் இல்லை. இது குறித்து பெரிய சோரகை ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு அதிகாரிகளிடமும் பொதுமக்கள் பல முறை முறையிட்டனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாமரத்து மேடு பொது மக்கள் குடிநீர் கேட்டு இன்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை : ராதாபுரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கபட்ட 2 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனம் திருட்டு. சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை. கன்னியாகுமரி : கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில் கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையாறு பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு. திருவாரூர் : பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நிதி பெற ரூ.10,000 லஞ்சம் வாங்கிய திருவாரூர் மாவட்ட, விக்ரபாண்டியம் பஞ்சாயத்து செயலாளர் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். நெல்லை : மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி கட்டடத்தின் மீது ஏறி 10 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வரின் புகாரால், மாணவர்கள் 10 பேரின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை : விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக, அவரது சகோதரர் வினோத் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விக்னேஷின் குடும்பத்தினர் சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜரானார். சென்னை : ரியாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள 6 தங்க ஸ்பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்க ஸ்பேனர்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை : விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த சாண்ட்ரா நண்டேஜா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை : சிக்னல் கோளாறு, கனமழையால் பாதிக்கப்பட்ட 40 புறநகர் ரயில்களின் சேவைகள் மீண்டும் சீரானது. 18 மெயில், விரைவு ரயில்கள், 22 புறநகர் ரயில்களின் சேவைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. செங்கல்பட்டு - விழுப்புரம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை பிரிவில் புறநகர் ரயில் சேவை சீரானது. கோவை : அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையேயான பிரச்சனையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம் செய்யப்பட்டது. முந்திச் செல்வது தொடர்பாக ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் அரசு பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி அடைந்தனர். சேலம் : பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்றத்தொகுதியில், ஆவடத்தூர், செட்டிமாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் சேலம் எம்பி. பார்த்திபன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended