• முகப்பு
  • வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் இன்று. 18 - 03 -22

வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் இன்று. 18 - 03 -22

Rakshita

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம் 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி மோலே மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார். 1438 – ஆப்சுபர்கின் இரண்டாம் ஆல்பர்ட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1608 – சுசேனியசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். 1766 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது. 1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். 1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1874 – குறிப்பிடத்தக்க வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது. 1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னர் படுகொலை செய்யப்பட்டார். 1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன. 1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார். 1925 – அமெரிக்காவின் மிசூரி, இலினோய், இந்தியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் இறந்தனர். 1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியக் குடியரசுப் படைகள் இத்தாலியப் படைகளை குவாடலசாரா சமரில் வென்றன. 1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர். 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட இட்லரும் பெனிட்டோ முசோலினியும் கூட்டிணைந்தனர். 1944 – இத்தாலியில் விசுவியசு எரிமலை தீக்கக்கியதில் 26 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். 1945 – இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின. 1948 – சோவியத் ஆலோசகர்கள் யுகோசுலாவியாவில் இருந்து வெளியேறினர். இது டீட்டோ–இசுட்டாலின் பிளவுக்கான முன்னோடி எனக் கருதப்பட்டது. 1953 – மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 265 பேர் உயிரிழந்தனர். 1962 – 1954 இல் ஆரம்பமான அல்சீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. 1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். 1970 – கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார். 1971 – பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் உயிரிழந்தனர். 1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர். 1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது. 1990 – அமெரிக்காவில், பாஸ்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து $500 மில்லியன் பெறுமதியான 12 ஓவியங்கள் திருடப்பட்டன.[1] 1990 – கிழக்கு செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக மக்களாட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன. 1994 – பொசுனியாவின் பொசுனியாக்களும் குரொவாசியர்களும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. 1996 – பிலிப்பீன்சு, குவிசோன் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 162 பேர் இறந்தனர். 1997 – துருக்கிக்கு சென்று கொண்டிருந்த உருசியாவின் அந்தோனொவ் ஏஎன்-24 விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 50 பேரும் உயிரிழந்தனர். 2003 – ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் உசைனினாலும் அவரது குடும்?

VIDEOS

RELATED NEWS

Recommended