இன்றைய (22-06-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 22, 2022 உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் அஸ்வினி : பயணங்கள் சாதகமாகும். பரணி : விழிப்புணர்வுடன் செயல்படவும். கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும். --------------------------------------- ரிஷபம் ஜூன் 22, 2022 பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கிருத்திகை : நம்பிக்கை மேம்படும். ரோகிணி : முன்னேற்றமான நாள். மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும். --------------------------------------- மிதுனம் ஜூன் 22, 2022 வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பயணங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். மனை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மிருகசீரிஷம் : காலதாமதம் குறையும். திருவாதிரை : ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் : புரிதல் உண்டாகும். --------------------------------------- கடகம் ஜூன் 22, 2022 ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப உயர்வு ஏற்படும். விட்டுக்கொடுத்து செயல்படுவதன் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் புனர்பூசம் : தெளிவு பிறக்கும். பூசம் : முயற்சிகள் கைகூடும். ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும். --------------------------------------- சிம்மம் ஜூன் 22, 2022 எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : சேமிப்பு குறையும். பூரம் : சிந்தித்து செயல்படவும். உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். --------------------------------------- கன்னி ஜூன் 22, 2022 சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். அறிமுகம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் உத்திரம் : எண்ணங்கள் கைகூடும். அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும். சித்திரை : மகிழ்ச்சியான நாள். --------------------------------------- துலாம் ஜூன் 22, 2022 உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் சித்திரை : ஆதரவான நாள். சுவாதி : தெளிவு ஏற்படும். விசாகம் : முடிவு கிடைக்கும். --------------------------------------- விருச்சிகம் ஜூன் 22, 2022 புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும். அனுஷம் : சாதகமான நாள். கேட்டை : திறமைகள் வெளிப்படும். --------------------------------------- தனுசு ஜூன் 22, 2022 வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிற்பம் மற்றும் நுணுக்கமான சில விஷயங்களில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். வாழ்க்கை துணைவர் வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மூலம் : வாய்ப்புகள் உண்டாகும். பூராடம் : லாபம் அதிகரிக்கும். உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். --------------------------------------- மகரம் ஜூன் 22, 2022 சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினை விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வேலையாட்களின் திறமைகளை அறிந்து பொறுப்புகளை அளிப்பீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் உத்திராடம் : மாற்றம் ஏற்படும். திருவோணம் : முடிவு கிடைக்கும். அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். --------------------------------------- கும்பம் ஜூன் 22, 2022 கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபகசக்தி மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அவிட்டம் : முன்னேற்றமான நாள். சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும். பூரட்டாதி : தாமதங்கள் குறையும். --------------------------------------- மீனம் ஜூன் 22, 2022 சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கல்வி கற்கும் திறனில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பும், ஆதரவும் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். உத்திரட்டாதி : புதுமையான நாள். ரேவதி : ஈடுபாடு உண்டாகும். ---------------------------------------

VIDEOS

RELATED NEWS

Recommended