இன்றைய (16-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 16, 2022 எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பழைய சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் அஸ்வினி : முதலீடுகள் அதிகரிக்கும். பரணி : இன்னல்கள் குறையும். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். ------------------------------------ ரிஷபம் ஜூலை 16, 2022 உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். தம்பதியர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கிருத்திகை : புதுமையான நாள். ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும். ------------------------------------ மிதுனம் ஜூலை 16, 2022 ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொறுமையான குணத்தினால் பலருடைய ஆதரவை பெறுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும். திருவாதிரை : விருப்பம் நிறைவேறும். புனர்பூசம் : ஆதரவான நாள். ------------------------------------ கடகம் ஜூலை 16, 2022 குழந்தைகளிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்களும், வருத்தங்களும் உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : கனிவு வேண்டும். பூசம் : அலைச்சல்கள் ஏற்படும். ஆயில்யம் : திருப்பங்கள் உண்டாகும். ------------------------------------ சிம்மம் ஜூலை 16, 2022 எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவமும், அறிமுகமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : தடைகள் விலகும். பூரம் : அனுபவம் கிடைக்கும். உத்திரம் : புரிதல் உண்டாகும். ------------------------------------ கன்னி ஜூலை 16, 2022 பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் சில ஆதாயகரமான சூழ்நிலைகள் காணப்படும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : தெளிவு பிறக்கும். அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும். சித்திரை : ஆதாயகரமான நாள். ----------------------------------- துலாம் ஜூலை 16, 2022 பந்தயம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சிந்தனைகள் தோன்றும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கலை சார்ந்த துறைகளில் புதிய தேடல் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் சித்திரை : லாபம் உண்டாகும். சுவாதி : முயற்சிகள் கைகூடும். விசாகம் : ஆர்வம் மேம்படும். ------------------------------------ விருச்சிகம் ஜூலை 16, 2022 செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாரிசுகளின் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். அனுஷம் : பிரச்சனைகள் குறையும். கேட்டை : முன்னேற்றமான நாள். ----------------------------------- தனுசு ஜூலை 16, 2022 ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வீர தீர விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இசை தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பமான கனவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மூலம் : சிந்தித்து செயல்படவும். பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும். உத்திராடம் : தாமதம் உண்டாகும். ------------------------------------ மகரம் ஜூலை 16, 2022 பேச்சு திறமைகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் உத்திராடம் : சாதகமான நாள். திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும். அவிட்டம் : முதலீடுகள் அதிகரிக்கும். ----------------------------------- கும்பம் ஜூலை 16, 2022 உடற்பயிற்சி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எண்ண ஓட்டங்களில் மாற்றம் ஏற்படும். அதிகாரம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திருப்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும். சதயம் : மாற்றமான நாள். பூரட்டாதி : விவேகம் வேண்டும். ------------------------------------ மீனம் ஜூலை 16, 2022 எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் குழப்பங்களும், அலைச்சல்களும் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் பூரட்டாதி : இழுபறிகள் குறையும். உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும். ரேவதி : அலைச்சல் ஏற்படும். -----------------------------------

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended