இன்றைய (13-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 13, 2022 பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். வரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் அஸ்வினி : முயற்சிகள் கைகூடும். பரணி : மந்தத்தன்மை குறையும். கிருத்திகை : நம்பிக்கை மேம்படும். ------------------------------------ ரிஷபம் ஜூலை 13, 2022 கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ரோகிணி : சேமிப்பு குறையும். மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும். ------------------------------------ மிதுனம் ஜூலை 13, 2022 நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும். புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும். ---------------------------------- கடகம் ஜூலை 13, 2022 தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். விருத்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : தடைகள் குறையும். பூசம் : புத்துணர்ச்சியான நாள். ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும். ------------------------------------ சிம்மம் ஜூலை 13, 2022 மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். துணிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மகம் : இலக்குகள் பிறக்கும். பூரம் :நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்திரம் : முயற்சிகள் கைகூடும். --------------------------------------- கன்னி ஜூலை 13, 2022 குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அஸ்தம் : நுட்பங்களை அறிவீர்கள். சித்திரை : விழிப்புணர்வு வேண்டும். ------------------------------------ துலாம் ஜூலை 13, 2022 எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மேம்படும். சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் சித்திரை : மனப்பக்குவம் மேம்படும். சுவாதி : மந்தமான நாள். விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். ------------------------------------ விருச்சிகம் ஜூலை 13, 2022 கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாறுபட்ட தருணங்கள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும். அனுஷம் : தடைகள் அகலும். கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும். ------------------------------------ தனுசு ஜூலை 13, 2022 உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும். பூராடம் : நன்மையான நாள். உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும். ----------------------------------- மகரம் ஜூலை 13, 2022 பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். கலை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் குறையும். கவலை அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திராடம் : தீர்வு உண்டாகும். திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். அவிட்டம் : பொறுப்புகள் குறையும். ------------------------------------ கும்பம் ஜூலை 13, 2022 வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் அவிட்டம் : மேன்மை உண்டாகும். சதயம் : சேமிப்பு மேம்படும். பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். --------------------------------- மீனம் ஜூலை 13, 2022 தாய்வழி உறவுகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான உங்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவியை வாங்கி மகிழ்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி : தன்னம்பிக்கையான நாள் ரேவதி : தடைகள் விலகும். ---------------------------------------

VIDEOS

RELATED NEWS

Recommended